சாமி சிலைக்கு உடை மாற்றுவது பற்றி விஜய் சேதுபதி அப்படி பேசியது தவறு.. எஸ்வி சேகர் ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு கதை சொல்லி இருந்தார். அதில் ஒரு குழந்தை கோவிலில் சாமி சிலையை குளிப்பாட்டுவதை காட்டுகிறார்கள், ஆனால் அதற்கு டிரஸ் மாற்றுவதை ஏன் காட்டாமல் துணி போட்டு மறைக்கிறார்கள் என்று கேட்டது என பேசி இருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி பேசியது தவறு என்று நடிகர் எஸ்.வி சேகர் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி சில நேரங்களில் மேடை நிகழ்ச்சிகளில் பேசுவது சர்ச்சையாகி இருக்கிறது. அது போல தான் சில வருடங்களுக்கு முன்பு அவர் இந்து மதத்தை பற்றி பேசியது இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதிக்கு எதிராக பலர் குரல் கொடுத்திருந்தனர். அது பற்றி எஸ் வி சேகர் சமீபத்தில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் சர்ச்சை
விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு குழந்தையும் அவருடைய தாத்தாவும் கோவிலுக்கு போயிருக்கிறாங்க. அப்போ அங்கிருந்த சிலையை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி இருக்காங்க. பிறகு ஒரு துணி போட்டு மறைத்துவிட்டு சிலைக்கு டிரஸ் மாற்றி இருக்கிறார்கள். அப்போ அந்த குழந்தை என்ன பண்ணுறாங்க என்று தாத்தாவிடம் கேட்க, அதற்கு சிலைக்கு டிரஸ் போடறாங்க என்று தாத்தா சொல்லி இருக்காங்க.
விஜய் சேதுபதி சிலை பற்றி பேச்சு
அதுக்கு அந்த குழந்தை ஏற்கனவே எல்லாரும் முன்பு தானே குளிக்க வச்சாங்க அப்போ டிரஸ் மாற்றும்போது மட்டும் ஏன் துணி போட்டு மறைச்சிட்டு மாத்துறாங்கன்னு கேள்வி கேட்டது என்று விஜய் சேதுபதி பேசி இருக்கிறார். இது பற்றி எஸ்வி சேகர் பேசும்போது, நடிகர் விஜய் சேதுபதி அப்படி பேசியது தவறு.

எஸ்வி சேகர் விளக்கம்
பொதுவாக எல்லா கடவுளுக்கும் டிரஸ்சோடு தான் சிலையே செய்வாங்க. அதுக்கு மேல ஒரு டிரஸ் போடுவாங்க. சிலர் சினிமாவில் நடிச்சிட்டா எல்லாருக்கும் எல்லாம் தெரியும்னு அர்த்தம் இல்ல. அவங்க வெளிய வந்து பேசும்போது தான் அங்களுக்கு என்ன எல்லாம் தெரியும்னு தெரியும். விஜய் சேதுபதியிடம் இப்போ வேணா நீங்க போய் கேளுங்க, அதற்கு அவர் நான் ஆமா நான் பேசியது ரைட் என்று இப்ப சொல்லுவாரா? இல்ல சொல்ல மாட்டாரு. விட்டுருங்க பாஸ் ஏதோ தெரியாம பேசிட்டேன்னு சொல்லுவாரு, அவ்வளவுதான் அவங்க.
நடிகர்கள் பற்றி எஸ்வி சேகர்
சினிமாவில் நடிச்சிட்டாங்க என்றதும் நீங்க எல்லாரும் ஏதோ மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அண்ணே பாரு ராக்கெட் விட்டா அப்படி போகும்னு சொல்லுவாங்க, என்ன வேணாலும் அவங்க சொல்லிட்டு இருப்பாங்க அதை எல்லாம் ஏன் நீங்க சீரியஸா எடுக்குறீங்க? இந்த மாதிரி எல்லாம் கேரளாவில் நடக்காது.
நடிகர்களுக்கு மவுசு
நீ சினிமாவில் நடிக்கிறியா? நடிச்சிட்டு போ அவ்வளவுதான் உன்னை யாரு கேட்டாங்கன்னு சொல்லுவாங்க. நம்ம ஊர்ல எல்லாமே மாறி இருக்குது. நடிகர்களுக்கு கற்பூரம் காட்டுகிறார்கள். ஆந்திராவில் இதை விட மோசம். என்ன பண்ண முடியும் அத்தனை பேருடைய எல்லா வார்த்தைக்கும் நாம உள் அர்த்தம் தேடிக்கிட்டு இருந்தா சண்டைதான் வரும். அவருக்கு அவ்வளவுதான் தெரியும் ஏதோ பேசிட்டு போறாருன்னு விட்டுட்டு போக வேண்டியதுதான் என்று எஸ்வி சேகர் பேசி இருக்கிறார். எஸ்வி சேகர் கொடுத்த விளக்கம் சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது விஜய் சேதுபதி சொன்ன கதை சரி என்று நீங்க நினைக்கிறீங்களா பாஸ்?












Click it and Unblock the Notifications