பாடகர் சரண் சொன்ன வார்த்தை! பின்னாடி இதுதான் நடந்தது! சிவகார்த்திகேயன் அழுதுட்டாரு, சரிகமப மஹதி நெகிழ்ச்சி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு ஆன போட்டியாளர்களில் ஒருவரான மஹதி பேட்டி ஒன்று கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சரிகமப நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து பேசி இருக்கிறார். அதோடு சரிகமப நிகழ்ச்சியில் மறக்க முடியாத பல நினைவுகள் குறித்தும் மஹதி பேசி இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக பலர் தங்களுடைய திறமையை உலகெங்கும் நிரூபித்து வருகிறார்கள். அதுபோல ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியில் பலரையும் வியக்க வைத்த ஒரு குழந்தை தான் மஹதி. "குழந்தை கடவுளுக்கு சமம்" என்று எல்லோரும் சொல்வார்கள். அது போல ஒரு செயலைத்தான் மஹதி செய்திருந்தார். சரிகமபா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மஹதி பைனலிஸ்ட் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

சரிகமப மஹதி
அப்போது மஹதியின் பெயரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல சரிகமப நிகழ்ச்சியில் தன்னுடைய பாடலால் மட்டுமல்லாமல் சுட்டித்தாலும் புவனேஸ் என்ற ஆறு வயது சிறுவன் பலருடைய மனதை கவர்ந்தார். இவரும் எப்படியும் இறுதி கட்டத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் அவருக்கு பதிலாக தான் மஹதியை தேர்வு செய்யப்பட்டார். ஆனால் புவனேஷ் தான் வெற்றி பெறவில்லை என்றாலும் மஹதியின் வெற்றியைப் பார்த்து சிரித்தார். ஆனால் அவர் சோகமாக சிரித்ததை கவனித்த மஹதி தன்னுடைய தலையில் தனக்காக சூட்டிய கிரீடத்தை புவனேஷுக்கு சூட்டி அழகு பார்த்தார்.
சரிகமப பைனல் போட்டியாளர்
அதோடு ஆறு போட்டியாளர்களில் மஹதி உட்காருவதற்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் புவனேஷையும் உட்கார வைத்திருந்தார். இது அனைவருடைய பாராட்டையும் பெற்றது. அதேபோல எஸ்பிபி ரவுண்டு நடைபெற்ற போது எஸ்பிபி பாடிய "மண்ணில் இந்த காதல் இன்றி" என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி அனைவரையும் வியக்க வைத்திருந்தார். அப்போது பாடகர் எஸ்பியின் மகனான சரண் சில உண்மைகளையும் சொல்லி இருந்தார்.
பாடகர் பாலசுப்ரமணியம் பாடல்
அதாவது எல்லோரும் இந்த பாடலை அப்பா மூச்சு விடாமல் பாடினார் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இல்லை என்று என்னுடைய அப்பா என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த பாடலை இந்த மேடையில் மஹதி பாடியது எனக்கு வியப்பை ஏற்படுத்திகிறது என்று சரண் பாராட்டி இருந்தார். இது பற்றி சமீபத்தில் மஹதி பேசுகையில், எஸ்பிபி சாரின் பாடலை நான் பாடியதும் சரண் சார் ரொம்பவும் பாராட்டினாரு. எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சிவகார்த்திகேயன் அழுகை
எஸ்பிபி சாரின் "மண்ணில் இந்த காதல் இன்றி" பாடலை நான் எடுக்க போறேன் என்று அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருந்தேன். அப்போது என்னுடைய அப்பா பயப்படாத பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு என்னை ஸ்விம்மிங் கிளாசுக்கு கூட்டிட்டு போனார். அங்கு நீச்சல் அடித்து மூச்சு பயிற்சி செய்த பிறகுதான் என்னால் இந்த பாடலை பாட முடிந்தது. அதுபோல பினாலே அன்று சிவகார்த்திகேயன் என்னிடம் "சின்னதாய் அவள்" பாடலை பாட சொன்னார். அந்த பாடலை நான் பாடியதும் சிவகார்த்திகேயன் அழுதுவிட்டார். அது எதற்காக அழுதார் என்று எனக்கு இப்ப வரைக்கும் தெரியவில்லை என்று அந்த பேட்டியில் மஹதி தன்னுடைய குழந்தைத்தனமான சிரிப்போடு பேசி இருக்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications