சரிகமப மேடையில் கதறி அழத யோகஸ்ரீ.. வீடியோவில் இருந்த காட்சி.. கடைசியில் கிடைத்த மகிழ்ச்சி.. கொண்டாடும் மக்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் க்ராண்ட் பினாலே நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திவினேஷ் வின்னராக செலக்ட் ஆனார். அவரை தொடர்ந்து முதல் ரன்னராக யோகஸ்ரீ செலக்ட் ஆகியிருந்தார். யோகஸ்ரீ தான் பாடுவதற்கு முன்பு தன்னை பற்றி வீடியோ வெளியிட்டதை பார்த்து கதறி அழுகறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் எல்லாம் டிவியில் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும்தான் இது போன்ற நிகழ்ச்சிகளை மக்களால் பார்க்க முடியும். அதனால் ஒரு சிலரால் மட்டும்தான் தொடர்ந்து டிவியில் அந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது எப்போது நினைத்தாலும் இந்த நிகழ்ச்சிகளில் வீடியோக்களை பார்ப்பதால் சோசியல் மீடியாக்களிலும் டிவி சேனல்களின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

சரிகமப நிகழ்ச்சி
அதுபோல சமீபத்தில் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் இப்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தது போலவே திவினேஷ் வெற்றி பெற்று இருந்தார்.
தவறிய வெற்றி
திவினேஷ் பாடல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானதோ அதேபோல யோகஸ்ரீக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். யோகஸ்ரீ தன்னுடைய தனித்துவமான குரலுக்கு தகுந்த மாதிரி பாடல்களை செலக்ட் செய்து பாடி வந்தார். ஒவ்வொரு வாரமும் இவருடைய பாடலை கேட்பதற்காக பலர் காத்திருப்பதாக கமெண்ட் கொடுத்து வந்தார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பைனல் 6 போட்டியாளர்களில் யோகஸ்ரீயும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
நினைவு பரிசு
சரிகமப நிகழ்ச்சி பல மறக்க முடியாத நினைவு பரிசுகளை யோகஸ்ரீக்கு கொடுத்திருந்தது. யோக ஸ்ரீயின் தந்தை ஆரம்பத்தில் ஸ்டுடியோ வைத்திருந்த நிலையில் குடும்ப சூழ்நிலையின் வறுமை காரணமாக டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். அவருக்கு பிரபல டைல்ஸ் நிறுவனம் யோகஸ்ரீயின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் பாட்னர்ஷிப் கொடுத்திருந்தது. இதனால் யோகஸ்ரீயின் அப்பாவும் தொழிலதிபராக மாறி இருந்தார். அதுபோல யோகஸ்ரீக்கு காது குத்து வேண்டும் என்ற பல நாள் ஆசையை சரிகமப நிகழ்ச்சி நடத்தி வைத்திருந்தது.
சின்ன வீட்டில் கூட்டு குடும்பம்
இந்த நிலையில் கிராண்ட் பினாலேவில் யோகஸ்ரீக்கு போடப்பட்ட வீடியோவை பார்த்ததும் யோகஸ்ரீ தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். அதாவது யோகஸ்ரீ ஓலை வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். அதுவும் மிகவும் இடிந்த நிலையில் இருந்த வீட்டில் தான் யோகஸ்ரீயின் குடும்பத்தினர் வசித்து வந்திருக்கிறார்கள். தாத்தா பாட்டி உட்பட கூட்டுக் குடும்பமாக யோகஸ்ரீ குடும்பம் அந்த சின்ன வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

வீட்டு மனை கிப்ட்
அதை வீடியோவாக கிராண்ட் பினாலே மேடையில் போடப்பட்டிருந்தது. அதோடு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த ஒரு தொழிலதிபர் யோக ஸ்ரீக்கு 1700 ஸ்கொயர் ஃபீட்டில் வீடு மனை கொடுத்து இருக்கிறார். அதற்கான பத்திரத்தையும் சரிகமப கிராண்ட் பினாலே மேடையில் யோகஸ்ரீயிடம் கொடுத்திருந்தனர். யோகஸ்ரீயின் வீடு வீடியோவை ஒளிபரப்பு செய்ததும் யோகஸ்ரீ தேம்பி தேம்பி அழுதிருந்தார்.
யோகஸ்ரீக்கு வாய்ப்பு
அவரை அர்ச்சனாதான் ஆறுதல் செய்திருந்தனர். யோகஸ்ரீக்கு வெற்றி பெறவில்லை என்பது பலருடைய வருத்தமாக இருந்தாலும் இவருக்கு பாடகரும் இசை அமைப்பாளருமான தேவா தன்னுடைய பாடலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இதுபோல இன்னமும் பிற இசையமைப்பாளர்களும் யோகஸ்ரீக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது. யோகஸ்ரீ பாடிய பல பாடல்கள் சோசியல் மீடியாவில் ஹிட் ஆகி கொண்டிருக்கிறது. அதில் உங்களுக்கு என்ன பாடல் பிடிக்கும்? வெற்றி வாய்ப்பு நூலிழையில் நழுவி விட்டது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?












Click it and Unblock the Notifications