அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய சரிகமப வின்னர் திவினேஷ்.. அடேங்கப்பா இத்தனை விருதுகளா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான திவினேஷ் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதாவது சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக 10 லட்சம் பணம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரைக்கும் திவினேஷ் வாழ்ந்து வந்த பழைய வீட்டில் இருந்து இப்போது புது வீட்டிற்கு குடி பெயர்ந்து இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனாலயே தொலைக்காட்சிகளில் புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே போல நிகழ்ச்சிகள் அடுத்த சேனல்களிலும் தொடங்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் ஒரு சில சேனல்களின் நிகழ்ச்சிகள் தான் ரசிகர்களை நன்கு கவர்ந்து வருகிறது. அதுபோல அதான் சரிகம நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சரிகமப டைட்டில் வின்னர்
சரிகமப நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னராக ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதுபோல இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிலும் திவினேஷ் வந்து பாடியிருந்தார்.
கண் கலங்கிய நடுவர்
அப்போது நடுவர் ஸ்வேதா மேனன் உட்பட அனைவருமே கண்கலங்கி இருந்தனர். திவினேஷ் பாடலை கேட்டு நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்திரன் எமோஷனல் ஆகியிருந்தார். தன்னுடைய மகன் சிம்புவுக்கு இதுபோல வாய்ப்பு கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் என்னுடைய மகனும் அப்போதே இதைவிட பெரிய லெவலில் இருந்திருப்பார் என்று பீல் பண்ணி பேசி இருந்தார்.
திவினேஷுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து ஆசீர்வாதம் வழங்கி இருந்தார்.
சரிகமப திவினேஷ் ஆசை
இப்படி பலருடைய பாராட்டையும் திவினேஷ் பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுபோல திவினேஷ் சரிகமப நிகழ்ச்சியில் ஒருமுறை தன்னுடைய தந்தைக்கு வேலை போய்விட்டது என்று கூறியிருந்தார். அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சிக்கு திவினேஷை அவருடைய அப்பா கூட்டிக்கொண்டு வருவதால் அவரால் சரியான நேரத்திற்கு வேலைக்கு போக முடியவில்லை என்று வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்கள் என்று விக்னேஷ் கூறியிருந்தார்.

திவினேஷ் குடும்பத்திற்கு உதவிய பாடகர்
அதோடு தன்னுடைய தந்தைக்கு ஒரு வண்டி வாங்கி கொடுப்பதுதான் தன்னுடைய கனவு என்று திவினேஷ் கூறியிருந்தார். அதைக் கேட்டு திவினேஷின் தந்தைக்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் ஒரு வண்டி வாங்கி கொடுத்து அவருடைய வருமானத்திற்கு வழி வகுத்து இருந்தார். அதேபோல திவினேஷ் டைட்டில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு 10 லட்சம் பணமும் கிடைத்தது. அவருடைய குடும்பத்தினர் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு மாறி இருக்கின்றனர்.

திவினேஷ் வாங்கிய விருதுகள்
திவினேஷ் குடும்பமும் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை தொடங்கி வைத்திருக்கின்றனர். புது வீட்டில் தினேஷ் தான் இதுவரைக்கும் வாங்கிய அனைத்து விருதுகளையும் அழகாக அலங்கரித்து வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது சோஷியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது. திவினேஷ் இசையமைப்பாளரும் பாடகருமான எம்.எஸ்.வி.யின் வாரிசு என்று அவருடைய குடும்பத்தினர் அங்கீகாரம் கொடுத்திருந்தனர். அதுபோல mgr சிவாஜி பாடல்களை திவினேஷ் பாடி பல தாத்தா பாட்டி மனதிலும் இடம் பிடித்து விட்டார். அவருடைய முன்னேற்றம் இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications