சரிகமப சீனியர் 5 போட்டியாளருக்கு நடந்த துயரம்! கணவரின் திடீர் இறப்பு! பவித்ராவின் மறுபக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் பவித்ரா என்ற போட்டியாளர் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். அவருடைய சோகமான மறுபக்கம் கேட்டு அனைவரும் ஃபீல் பண்ணி இருக்கிறார்கள். பவித்ராவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து போயிருக்கிறார். தன்னுடைய கணவரின் கனவை நிறைவேற்றுவதற்காக பவித்ரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியிருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் புதியதாக பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். பலருடைய சோகங்களை மறக்க வைக்கும் பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகிறது. சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள்.

Sa Re Ga Ma Pa Zee Tamil

விமர்சனங்கள்

அதுபோல திறமை உள்ள அடிதட்டு மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆனாலும் சில சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் பாடல்களை தாண்டி அழுகாச்சி காட்சிகளும், போட்டியாளர்களின் சோகமான மறுபக்கம் தான் இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டாக காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருக்கிறது.

சரிகமப திவினேஷ் குடும்பம்

ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல டிஆர்பி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பற்றி நெகட்டிவ் கமெண்ட்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நிகழ்ச்சியின் மூலமாக பல எளியவர்களும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வீடு மிகவும் சிறியதாக இருந்தது. தாத்தாவின் வழிகாட்டுதலால் திவினேஷ் சிறந்த பாடகராக மாறி இருந்தார். ஸ்பெஷலாக பாடலுக்கு என்று பிரத்யேகமாக பயிற்சி எடுக்கவில்லை என்றாலும் காதால் கேட்ட பழைய பாடல்களை வைத்து பாடியே திவினேஷ் டைட்டில் வின்னராக மாறி இருந்தார்.

சரிகமப வின்னர்

அதேபோல ரன்னராக தேர்வான ஹேமித்ராவின் குடும்பமும் மிகவும் எளிமையான குடும்பம் தான். சொந்த வீடு இல்லாமல் ஒரு உடைந்து போன வீட்டில் மொத்த குடும்பமும் தங்கி இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி அவர்களுடைய வாழ்க்கையையும் மாற்றி இருந்தது. அந்த வரிசையில் இப்போது சரிகமப சீனியர் நிகழ்ச்சிக்கான ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதிலும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சரிகமப போட்டியாளர் பவித்ரா

இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். அதில் பவித்ரா என்ற போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் "கூண்டுக்குள்ள என்ன வச்சி" இந்த பாடலை பாடியிருந்தார். பாடலை கேட்டு பாராட்டிய பாடகர் ஸ்ரீநிவாஸ், "நீங்க அருமையாக பாடுறீங்க பவித்ரா. நீங்க என்ன வேலை பாக்குறீங்க?" என்று கேட்டு இருந்தார். அதற்கு பவித்ரா நான் ஹவுஸ் வைஃப்பாக இருக்கிறேன் சார் என்று சொல்லி இருந்தார்.

Sa Re Ga Ma Pa Zee Tamil

பவித்ராவின் மறுபக்கம்

உங்களுடைய கணவர் என்ன வேலை பாக்குறாரு என்று கேட்டபோது "என்னுடைய கணவர் ஐந்து மாதத்திற்கு முன்புதான் இறந்து போய்விட்டார். 5 நிமிஷத்தில் வந்துடுறேன்னு சொல்லிட்டு போனாரு போன வேலையை முடிச்சிட்டு திரும்ப வரும் போது விபத்தில் இறந்து விட்டார்" என்று கை குழந்தையோடு பவித்ரா இருப்பதை பார்த்து நடுவர்கள், டி ராஜேந்தர் உட்பட பலரும் கண் கலங்கி இருந்தனர்.

ஸ்வேதா மேனன் ஆறுதல்

அப்போது பவித்ரா, "என்னுடைய கணவர் விபத்தில் இறந்து விட்டார் அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன்" என்று சொல்லி இருந்தார். அவருக்காக பாடகி ஸ்வேதா மேடைக்கு வந்து, "உங்களுக்காக நான் இருக்கிறேன், நீங்கதான் வாழ்க்கையில் ஜெயிக்கணும்" என்று அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+