Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடையாளம் தெரியாமல் மாறிய சாமி பட வில்லன் “பெருமாள் பிச்சை“.. இவர் வாழ்க்கையில் இத்தனை சோகமா? வெளியான போட்டோஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரம், திரிஷா முக்கிய கேரக்டரில் நடித்த "சாமி" திரைப்படத்தில் "பெருமாள் பிச்சை" என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து தமிழில் பிரபலமானவர்தான் கோட்டா ஸ்ரீனிவாசராவ். இவர் அது போல தமிழில் திருப்பாச்சி, பரமசிவன், சகுனி, குத்து என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய புகைப்படம் தான் இப்போது இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மாறி இருக்கிறார்.

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகரும் பாடகருமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தெலுங்கில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதுவும் அதிகமான திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல தமிழிலும் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். தமிழில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது சாமி திரைப்படம் தான்.

Kota Srinivasa Rao Kollywood

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்த திரைப்படம்

அது மட்டுமல்லாமல் இவர் நடிகராக மட்டுமல்லாமல் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரைக்கும் ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழில் முதல்முறையாக மாசி என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமாகி பிறகு தாண்டவம் திரைப்படம், மம்பட்டியான் என கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார்.

சாமி படம் வில்லன்

இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போய் தான் ஹரி இவரை சாமி திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவர் பெருமாள் பிச்சை என்ற கேரக்டரில் கதாநாயகனை விடவும் பெஸ்ட் என்று சொல்கிற மாதிரி தான் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருப்பார். இவருடைய வசனங்களும் அதற்கு ஏற்ப முக எக்ஸ்பிரஷனும் தனித்துவமாக இருக்கும். பார்த்ததும் பயமுறுத்துவது போன்று தான் இவருடைய நடிப்பு அந்த திரைப்படத்தில் இருக்கும்.

சர்ச்சைக்கு விளக்கம்

அதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளியான "கோ" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அதிகமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் அதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தது. அது குறித்து நான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சொல்லி இவர் வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் குடும்பம்

அதுபோல கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு ருக்மணி என்ற மனைவியும் அவர்களுக்கு பிரசாத் என்ற மகனும் பவானி பல்லவி என்ற மகள்களும் இருக்கின்றனர். இதில் பிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் இறந்துவிட்டாராம். அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது கண்ணீரோடு கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மகன் இறப்பு

அதில் அவர் கண்ணீரோடு பேசுகையில், 2016 ஆம் ஆண்டு என்னுடைய மகனுக்கு வெளிநாட்டில் இருந்து பிரத்தியேகமாக பைக் ஒன்றை வாங்கி கொடுத்தோம். அந்த பைக்கில் ஹைதராபாத்தில் என்னுடைய மகன் வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக லாரி அவன் மீது மோதி இறந்துவிட்டான். அவனுடைய இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் இதை நினைத்து நான் அழுது கொண்டிருக்கிறேன்.

ரசிகர்களின் ஆறுதல்

அதனால் என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அதுபோல அவருடைய மகன் பிரசாத் ஜே.டி சக்கரவர்த்தியின் சித்தம் திரைப்படத்திலும், காயம் 2 திரைப்படத்திலும் தன்னுடைய தந்தையோடு நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kota Srinivasa Rao Kollywood

தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படம்

இந்த நிலையில் தயாரிப்பாளர் பந்தில்லா கணேஷ் கோட்டா ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு புகைப்படங்களும் எடுத்து இருக்கிறார் அந்த புகைப்படங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தில் கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மெலிந்து காணப்படுகிறார். கால்களில் புண்களும் இருக்கிறது. அவருக்கு சுகர் பிரச்சனை இருப்பதால் உடல் நல பிரச்சனை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+