எதிர்நீச்சல்: ஆதிரைக்கு யாரோடு கல்யாணம்? உண்மையை உளறிய சக்தி..இதுதான் நடக்கப் போகிறதா?
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரைக்கு கரிகாலனோடு திருமணம் நடக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருவதாக சக்தி கூறி இருக்கிறார்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் இனி வருவதை பற்றி அந்த சீரியலில் சக்தியாக நடிக்கும் சபரி பிரசாத் கூறி இருக்கிறார்.
சீரியலில் ஆதிரையின் திருமணம் யாரோடு என்ற பரபரப்பான திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
திருமண விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி சக்தி கூறிய தகவலை கேட்டு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

பெண்களின் போராட்டம்
சன் டிவியில் முன்னணியில் இருக்கும் சீரியல்களின் வரிசையில் எதிர்நீச்சல் சீரியலும் இருந்து வருகிறது. இந்த சீரியல் சமீபத்தில் தான் ஒரு வருடம் முடிவடைந்து இரண்டாவது வருடத்தை தொடங்கி இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுவாக சீரியல்கள் என்றால் குடும்ப பெண்கள் மட்டும்தான் பார்த்து வருவார்கள். ஆனால் இந்த சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. பெண்கள் வீட்டில் அடிமைப்படுத்துகிறார்கள் என்பது தெரியாமலே அடிமையாக இருக்கும் நிலையில் அவர்களுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக எப்படி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகிறார்கள் என்பது பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

ஆதிரையின் காதல் தெரிஞ்சி போச்சு
ஆண் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தில் கடைசி மருமகளால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்த மாற்றங்களை கொண்டு வருவதால் வீட்டிற்குள் ஏற்படும் பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் பற்றி தான் இந்த சீரியலில் இருந்து வருகிறது. ஏற்கனவே ஆதி குணசேகரனின் சூழ்ச்சியால் ஜனனி மற்றும் சக்தி இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இருந்தாலும் இவர்கள் இப்போது ஒரே வீட்டில் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஆதிரையின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும் கரிகாலனோடு திருமணம் செய்து வைக்க குணசேகரன் முடிவெடுத்து இருப்பதற்கு வீட்டில் பலருடைய எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர்.

யாரோடு திருமணம்
என்னுடைய சம்பாத்தியத்தில் சாப்பிடுபவர்கள் நான் எடுக்கும் முடிவிலிருந்து மாறுபடக்கூடாது என்று குணசேகரன் கூறி இருப்பதால், இனி வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், குணசேகரனின் அம்மாவுக்கும் ஆதிரை மற்றும் கரிகாலனின் திருமணம் சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இனி அடுத்த கட்டமாக ஆதிரை காதலிக்கும் அருளோடு திருமணம் நடக்குமா? அல்லது குணசேகரனின் பிடிவாதத்தினால் கரிகாலனோடு திருமண நடக்குமா? என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சக்தியாக நடிக்கும் சபரி பிரசாத் தற்போது பேட்டி ஒன்றில் இந்த சீரியல் பற்றி கூறியிருக்கிறார்.

திருமணமே வேண்டாமாம்
அதில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. அன்று என்ன நடக்கப் போகிறது என்பதே அன்னைக்கு காலையில் தான் எங்களுக்கு சொல்லப்படும். அதனால் அடுத்து என்னவாக இருக்குமோ? அதுவாகத்தான் இருக்குமோ? என்று நாங்களும் ரசிகர்கள் போலத்தான் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் நான் வெளியே செல்லும்போதெல்லாம் பலர் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்க இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் என்னை பொறுத்த வரையில் கல்யாணம் நடக்காமல் இருக்கிறதே பெருசுதான். அதுவே பெஸ்ட் .இதுல எதுக்கு இந்த கல்யாணம்? என்று நக்கலாக இவர் பேசியதை வைத்து அப்போ வீட்டில் எதுவும் பிரச்சனையா? என்று சபரி பிரசாத்தை கலாய்த்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications