கடற்கரையில் நீச்சல் உடையில் சாய் பல்லவி! இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாச்சு தெரியுமா? குவியுது கமெண்ட்ஸ்
சென்னை: நடிகை சாய் பல்லவி என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது இயல்பான அழகு. மேக்கப் இல்லாமல் மாய்ஸ்சரைசர், காஜல், லிப் பாம் மட்டும் பயன்படுத்தி ஒரு நடிகை இப்படி சிம்பிளா இருக்க முடியுமா என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர். திரைப்படம் என்றாலே ஆடம்பரமும் அழகு சாதனங்களும் தான் என்று இருந்த ஒரு காலத்தில் இயல்பான அழகுக்கு ஒரு புதிய வரையறையை உருவாக்கினார். ஆனால் இப்போ ஒரு சின்ன விஷயம் பெரிய சர்ச்சையா மாறி ட்ரோல் கணைகள் அவரை நோக்கிப் பாயுது.

ஒரு விடுமுறை பயணம்
சமீபத்தில் சாய் பல்லவியும் அவரது தங்கச்சி பூஜா கண்ணனும் கடற்கரைக்கு வெக்கேஷன் போயிருக்காங்க. அங்க அவங்க எடுத்த புகைப்படங்களை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் பண்ணியிருக்காங்க. அதுல சாய்பல்லவி நீச்சல் உடையிலும் ஒரு படத்துல வெட்சூட்லயும் இருக்காங்க. அக்கா தங்கச்சி ரொம்பச் சந்தோஷமா சிரிச்சிப் பேசிட்டு இருக்குற மாதிரி அந்தப் படங்கள் இருந்தன. ஒரு கடற்கரைப் பயணத்தில் சாதாரணமா ஒரு ஃபேமிலி எடுக்கிற புகைப்படம் தான் அது.
ஆனா இந்தப் படங்கள் போஸ்ட் ஆன அடுத்த நொடியே கமென்ட் பாக்ஸ் பத்தி எரிய ஆரம்பிச்சுது. சாய்பல்லவியிடம் இருந்து இதை எதிர்பார்க்கலனு ஒருத்தர். மற்ற ஹீரோயின்களைப் போல இவங்களும் மாறிட்டாருனு இன்னொருத்தர். திரையில மட்டும் பிகினி போட மாட்டேன்னு சொல்றவர் வெளிய மட்டும் பிகினி போடுவாரானு சிலர் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. இதுல உச்சகட்டமா ராமாயண படத்துல அவருக்கு சீதை வேடம் கொடுக்கக் கூடாதுனு டிரோல் பண்ணாங்க. இந்த விஷயம் ஏன் இவ்வளவு பெரிய விஷயமாச்சு தெரியுமா?
சாய் பல்லவியின் பிம்பம்
சாய் பல்லவி தன்னை ஒரு இயற்கையான கலைஞரா போர்ட்ரே பண்ணிக்கிட்டதுதான் இதுக்குக் காரணம். ஃபேர்னஸ் கிரீம் விளம்பரத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னதும் சரி. எந்தப் படத்திலேயும் சிரிக்காத கேரக்டர் பண்ண மாட்டேன்னு சொன்னதும் சரி மேக்கப் இல்லாம நடிச்சது. இப்படிப் பல விஷயங்கள் அவரை சாதாரணமான நடிகைங்கிற பிம்பத்திலிருந்து உயர்த்தி வச்சுது. அதனால அவர் தன்னை போர்ட்ரே பண்ணிக்கிட்ட இமேஜிலிருந்து கொஞ்சம் தள்ளிப் போற மாதிரி ஒரு நிகழ்வு நடந்தாக்கூட ரசிகர்கள் அதை ஏத்துக்க மறுக்கிறாங்க.
ஆனா இன்னொரு பக்கம் ரசிகர்கள் சிலர் சாய்பல்லவிக்கு ஆதரவாவும் குரல் கொடுத்தாங்க. கடற்கரைக்கு சேலை கட்டிட்டுப் போக முடியுமா? தண்ணீர்ல என்ன உடை அணிய வேண்டும்னு நீங்கள் தான் முடிவு பண்ணுவீங்களா? அது அவரோட சுதந்திரம் அவரோட சாய்ஸ்னு பலர் கமென்ட் செக்ஷன்ல பைட் பண்ண ஆரம்பிச்சாங்க.
சாய் பல்லவியின் சர்ச்சை
அதுபோல சாய் பல்லவியின் சகோதரி பூஜா ஒரு சில புகைப்படங்களை தான் பகிர்ந்து இருக்கிறார் ஆனால் அதை வைத்து ஏஐ மூலமாக இன்னும் சில நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தையும் சிலர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றனர் அந்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறது ஆனால் அந்த புகைப்படங்களை பூஜா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சாய் பல்லவியின் புகைப்படங்கள் அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

சாய் பல்லவியின் வாழ்க்கை பயணம்
கோத்தகிரில பிறந்த சாய்பல்லவி ஒரு டாக்டர். அவர் ஜார்ஜியால மருத்துவப் படிப்பு படிச்சாரு. அதுக்கப்புறம்தான் அவருக்கு மலர் (பிரேமம் படம்) கேரக்டர் கிடைச்சுது. மேக்கப் இல்லாம இயல்பா நடிச்ச அவருடைய கதாபாத்திரம் படம் வெளியானதுமே இந்தியா முழுக்க ஒரு சென்சேஷனாச்சு. ரசிகர்கள் பலரும் சாய்பல்லவி போல இயல்பா இருக்கணும்னு ஆரம்பிச்சாங்க. பிதா என்ற தெலுங்கு படத்துல அவரோட டான்ஸ் மூவ்மென்ட்ஸ் தென்னிந்திய சினிமால அவரை ஒரு டான்ஸ் ஸ்டாரா மாத்துச்சு. ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை அவர் வாங்கியிருக்காரு.
சாய்பல்லவி ஒரு நடிகையா மட்டும் இல்லாம ஒரு தனி மனுஷியா தன்மையா இருக்க நினைக்கிறவர். அதுதான் அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி தனித்துவமான கலைஞராக நிலைநிறுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சையும் அவரது உழைப்பும் எளிமையும் ஒரு கலைஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடமா இருக்கு.












Click it and Unblock the Notifications