விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. காரணம் இதுதானா?
சென்னை: பாடகி சைந்தவி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் மீண்டும் ஜிவி பிரகாஷுடன் இணைந்து அவருடைய இசை கச்சேரியில் சைந்தவி பாடப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திரை உலகில் அடுத்தடுத்து பல எதிர்பாராத விவாகரத்து சம்பவங்கள் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை பிரிய போவதை அறிவித்தார். அதை இவரை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா இருவரும் பிரியவுள்ள தகவலை உறுதி செய்து இருக்கிறார்கள்.

இவர்களைப் போல தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி தங்கள் பிரிவை உறுதி செய்திருந்தனர். இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு வரும் நிலையில் இவர்கள் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்ற பேச்சு எழுந்து வந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று இன்று கோர்ட்டில் கூறப்பட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு இந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
இவர்களைப் போல ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான். இருவரும் திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆன நிலையில் பரஸ்பரமாக பிரியப் போகிறோம் என்று முடிவு எடுத்து சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய முடிவு பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர்.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ் பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்காக கொடுத்திருக்கிறார். ஆடுகளம் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பலராலும் பாடப்பட்டது. அந்த படத்தில் இருந்து பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைத்தது. அதுபோல ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சைந்தவி பல பாடல்கள் பாடி இருக்கிறார்.
இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிய போகிறோம் என்று அறிவித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்துக்கும்.. மோகினி டே விவாகரத்திற்கும் சம்பந்தம் இல்ல! ஆனால்! வழக்கறிஞர் பேட்டி
ஆனாலும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் ஒரு இசைக் கச்சேரி நடத்த இருக்கிறாராம். அதில் பாடகி சைந்தவி அவரோடு சேர்ந்து பாடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகினாலும் தங்களுடைய பிசினஸ் மற்றும் நட்பு என்றும் மாறாமல் தொடரும் என்று சொன்னது போலவே செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications