திருச்செந்தூரில் மனம் உருகி வேண்டிய சாக்ஷி அகர்வால்.. விஜய் அரசியல் பற்றி ஓபனாக பேசிய வார்த்தை
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த பிறகு அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சாக்ஷி, விஜய் போல இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. ஆனால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது தான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
சில நாட்களாக யூடியூப் சேனல்களில் சிலர் திருச்செந்தூர் பற்றி பல்வேறு தகவல்களை சொல்லி வருகின்றனர். இதனால் அங்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கட்டுக்கடங்காமல் கூட்டம் படையெடுத்துக் கொண்டிருக்கிறது. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது போல பல பிரபலங்களும் அங்கு படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நாட்களாகவே திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபலங்கள் அதன் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

திருச்செந்தூரில் முருகனை நிம்மதியாக தரிசனம் செய்யலாம் என்று நினைத்த ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் அங்கு கூட்டம் அதிகமாக இருப்பது கஷ்டத்தை தான் கொடுத்திருக்கிறது. ஆனாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு சாக்ஷி சிரித்தபடியே பதில் அளித்து இருக்கிறார். அதில் விஜய் போல இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதால் நல்ல நல்ல விஷயங்கள் நடக்கணும்... நடக்கும் என்று நம்புகிறேன். அவர் அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.
ஏனென்றால் அவர் சினிமாவில் நான் இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருப்பது அவருடைய ரசிகையா எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும் இளம் தலைவர் வருவதால் நல்ல விஷயம் நடக்கும் என்று நான் வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறீர்களா? என்று கேட்டதற்கு சாக்ஷி எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தே சமாளித்திருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில் நான் திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு முதல் முறையாக வந்து இருக்கிறேன். இது எனக்கு ரொம்பவும் வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இங்குள்ள மக்கள் ரொம்பவும் பாசமாக இருக்கிறார்கள். திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது எனக்கு மன நிறைவாக இருக்கிறது.
நான் சில திரைப்படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று என்னுடைய ஒரு படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்.

நான் மலையாளம் மற்றும் கன்னடத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த படங்களுக்கும் மக்கள் எனக்கு சப்போர்ட் தரணும். இந்த வருடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நல்ல வருடமாக அமைய வேண்டும் என்று நான் மனதார வேண்டிக் கொள்கிறேன் என அங்கு சாக்ஷி அகர்வால் பேசி இருக்கிறார். அதோடு தன்னிடம் செல்பி கேட்கும் எல்லா ரசிகர்களோடும் நின்று பொறுமையாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்.
சினிமா கதாநாயகி என்றால் சினிமாக்களில் மட்டும்தான் வருவேன் என்று இல்லை சமூக வலைத்தளத்திலும் நான் பிஸியோ பிஸி என ரசிகர்களுக்காகவே பார்த்து பார்த்து போட்டோ சூட்களை எடுத்துக்கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் சாப்பிடுவதற்கு கூட மறந்தாலும் மறந்து விடுவார் போல ஆனால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்கு மறப்பதே இல்லையாம்.
எப்பவும் போனை கையில் வைத்துக்கொண்டு அதிலேயே பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் சாக்ஷி அகர்வால் தான். வேலை வெட்டிக்கு செல்பவர்களையும் விட்டுவிடாமல் அவர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரம் பார்த்து இவர் போஸ்ட்களை தட்டிவிட்டு விடுகிறார். இவர் போஸ்ட் போட்டதும் என்ன வேலை இருந்தாலும் பரவாயில்லை என வேலையை ஒதுக்கிவிட்டு போட்டோவை ரசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இப்படியே எத்தனை நாளைக்கு தான் போட்டோ சூட்டிலேயே பார்த்துக்கொண்டிருப்பது சீக்கிரமாக சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வாங்க என்று ரசிகர்கள் அன்பு கட்டளைகளையும் விடுகின்றனர். ரசிகர்களின் ஆதரவினை பார்க்கும்போது இவருக்கு வெள்ளித்திரையில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு தான் இன்னும் இவருக்கு சரியாக கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் இவர் கேரக்டருக்கு தகுந்த மாதிரி கேரக்டர் அமையாததால் துணை கதாநாயகியாகவே நடித்து கொண்டிருக்கிறார். இதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்து வருகிறது.
-
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications