சௌந்தர்யாவை ஜெயிக்க வைப்பதற்காக நடக்கும் மோசடி!கோபத்தில் சனம் ஷெட்டி செய்த செயல்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் சௌந்தர்யாவை ஜெயிக்க வைப்பதற்கு மோசடி நடப்பதாக சனம் ஷெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். அதை இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது. 100 நாட்களை கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி கட்டத்தை இந்த நிகழ்ச்சி 8ல் இருக்கும் நிலையில் இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

நேற்று வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆறு பேர் பைனலிஸ்ட் ஆக இருந்தார்கள். ஆனால் நேற்று ஜாக்குலின் வெளியேற்றப்பட்ட பிறகு 5 போட்டியாளர்கள் ஃபைனலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இதில் முத்துக்குமரன் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சௌந்தர்யாவிற்கும் அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சௌந்தர்யாவை ஜெயிக்க வைப்பதற்கு அவருடைய காதலரான விஷ்ணு பிஆர் டீம் வைத்து ஓட்டு வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சீசனில் டைட்டில் ஜெயித்த அர்ச்சனா பிஆர் வேலையால் தான் டைட்டில் ஜெயித்தார் என்று அவரோடு போட்டியிட்ட சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

சௌந்தர்யாவிற்கு தான் அதிக பிஆர் வேலை நடப்பதாக ரீஎன்றியாகும் போட்டியாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சௌந்தர்யா இந்த நிகழ்ச்சியில் பெரியதாக எதுவும் செய்யவில்லை ஆனால் அவருக்கு பி ஆர் வேலை செய்வதால் அவர்
இறுதி பைனலுக்கு வந்திருக்கிறார் என்று நேரடியாகவே சண்டையில் ஈடுபட்டார்.
அதற்கு விஜய் சேதுபதி பதிலடிம் கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் எதுவும் செய்யாமல் யாராலும் பி ஆர் வேலையை மட்டும் நம்பி முன்னுக்கு வர முடியாது பி.ஆர் சப்போர்ட் இருந்தாலும் உள்ளே இருப்பவர்கள் ஏதாவது செய்தால்தான் அவர்களால் இந்த நிகழ்ச்சியில் நிலைத்திருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

அதற்கு பிறகும் சௌந்தர்யாவிடம் சுனிதா உட்பட சிலர் அதே குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருந்தனர். சௌந்தர்யாவை ஜெயிக்க வைப்பதற்காக அவருடைய காதலர் விஷ்ணு விஜய் முயன்று வருவதாக சனம் ஷெட்டி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மிஸ்டு கால் மூலம் வாக்களிக்க முறை உள்ளது.
அதன்படி சௌந்தர்யா வாக்களிக்க கொடுக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் நம்பரை சௌந்தர்யாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இணைத்துள்ளனர். அதில் கால் என்ற ஆப்ஷன் இருக்கும் அதில் சௌந்தர்யா நம்பர் ஆக இருக்கும் என எண்ணி ரசிகர்கள் கால் செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு அந்த மிஸ்டு கால் நம்பரை அதில் இணைத்து வைத்திருக்கிறார்கள்.
அதுபோல விஷ்ணு விஜய் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அர்ஜென்ட் கால் பண்ணுங்க என்று ஒரு போன் நம்பரை பதிவிட்டு இருக்கிறார், அதுவும் சௌந்தர்யாவுக்கு வாக்களிக்கும் நம்பர். விஷ்ணுவுக்கு என்ன ஆனதோ என்று பலர் அவருக்கு கால் செய்து வருகின்றனர். பின்னர் தான் அவர் சவுந்தர்யாவிற்காக வாக்கு கேட்டு அந்த நம்பரை அதில் பேஸ்ட் செய்வது தெரிய வந்திருக்கிறது.
இதை சனம் ஷெட்டி இவர்கள் ஸ்கேம் செய்கிறார்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்க்க நெட்டிசன்கள் சௌந்தர்யாவின் பி ஆர் வேலை அதிகமாக நடக்கிறது என்று சொல்லி வருகிறார்கள்.
இன்னும் அதிகமான ரசிகர்கள் எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்பதற்கு தானே தங்களுக்கு ஓட்டு அழிக்கும்படி கேட்கிறார்கள். அதுபோல சௌந்தர்யா சார்பாக அவருடைய உறவினர்கள் செய்கிறார்கள் இதில் என்ன தப்பு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications