சங்கீதாவை இஷ்டமின்றி கல்யாணம் செய்தாரா விஜய்? பிரபலம் இப்படி சொல்றாரே.. அடடே, அஜித் இப்படிப்பட்டவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முழுநேர அரசியல்வாதியாக விஜய் உருவெடுத்துள்ள நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், பிரபல நடிகர் ரமேஷ்கண்ணா, அஜித், விஜய் பற்றி தந்திருக்கும் இருவேறு பேட்டிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அஜித்தின் நெருங்கிய நண்பராக இருப்பவர் ரமேஷ் கண்ணா.. ஆரம்பத்தில் பல படங்களில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.. வில்லன் படத்தில் துவங்கி அஜித்துடன் பல படங்களில் நடித்திருக்கிறார் ரமேஷ் கண்ணா. அதுமட்டுமல்லாமல் அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தை டைரக்ட செய்துள்ளார். இப்போது 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்...

Television Sangeetha actor vijay

இந்நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா அளித்த பேட்டி ஒன்றில், ''ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் விஜய் எப்போதுமே அமைதியாகவே இருப்பார். இதுவரை அவர் அரசியல் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் இன்றைக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படி விஜய்யை போலவேதான், அஜித்குமாரும் ஷூட்டிங்குகளில் அரசியல் பேசியதே கிடையாது.,

அஜித் அரசியல்: யாராவது அரசியல் குறித்து பேச தொடங்கினால் கூட, அமைதியாகி விடுவார். அதோடு அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் துளி கூட கிடையாது. அதனால் விஜய்யை போன்று அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

ஆனால், எதிர்காலத்தில் அஜித் அரசியலுக்கு வருவாரா? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.. முதல்ல அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், அதன்பிறகு சொல்கிறேன்'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.

அதேபோல மற்றொரு பேட்டியில் விஜய் பற்றியும் சொல்லியிருக்கிறார்.. ரமேஷ் கண்ணாவின் மகன் திருமணத்திற்கு விஜய் சென்றாராம். அப்போது ரமேஷ் கண்ணாவின் மகனைப்பார்த்து, "நீயெல்லாம் கொடுத்து வெச்சவன். எனக்குத்தான் என்னோட அப்பா சீக்கிரமே கல்யாணம் செய்து வச்சிட்டாரு" என்று கிண்டலாக சொன்னாராம்.

கமெண்ட்கள்: உடனே இணையவாசிகள், இதற்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. "பெற்றோர்களின் வற்புறுத்தலின்பேரில்தான், சங்கீதாவை விஜய் திருமணம் செய்து கொண்டுள்ளார். விருப்பமில்லாமல் சங்கீதாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாலும், நிச்சயதார்த்தத்திற்கு பிறகு 8 மாத காலம், இருவரும் அதிகம் சந்தித்து பேசி, தங்களைத் தாங்களே நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகே மனம்விரும்பி இருவருக்கும் திருமணம் நடந்தது.. மகிழ்ச்சியான வாழ்க்கையும் நடத்தினார்கள்" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+