kanmani serial: கண்மணிக்கு சஞ்சீவ்தான் பிளஸ்...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலுக்கு சஞ்சீவ்தான் பிளஸ். இவருக்கு ஏற்ற கதையாகவும் கண்மணி சீரியல் இருக்கிறது.
டிவி சீரியல்கள் ஆண்களை மையப்படுத்தி கதை அமைவதும், அதற்கேற்ப சின்னத்திரையில் டெடிகேஷனான ஆர்ட்டிஸ்ட் கிடைப்பதும் அரிதுதான்.
அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் சின்னத்திரைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

கண்ணன் சின்னவர்
சின்னத்திரை பெரிய திரை என்கிற பாகுபாடு இல்லாமல், முழுக்க முழுக்க அர்ப்பணிப்போடு ஒவ்வொருகாட்சி, சின்ன சின்ன வசனம் என்று பார்த்து பார்த்து நடிப்பவர் சஞ்சீவ். தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையான சந்தர்ப்பமாக மாற்றி ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியை இவர் நடிக்கும் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கலாம். கண்மணி சீரியலில் சின்னவராக இப்படித்தான் ஸ்கோர் பண்ணுகிறார்.

காலத்துக்கு ஏற்ப
காலத்துக்கு ஏற்ப நாமும் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணாமல், டயலாக் பேப்பர் கையில் வேண்டும் என்று கேட்டு வாங்கி மனப்பாடம் செய்து வசனம் பேசுவது.. கிளிசரின் போடாமல் கூடியவரை வசனம் பேசும்போது இயற்கையாக அழ பார்ப்பது.. அழுகிறேன் என்று பாவ்லா செய்யாமல் கண்ணீரோடு வசனம் பேசி பரிதாபப்பட வைப்பது என்பதில் சஞ்சீவ் வல்லவர்.

திருமதி செல்வம்
திருமதி செல்வம் சீரியல் தனது நடிப்பு பாதையை மாற்றி அமைத்தது என்று கூறியுள்ளார். திருமதி செல்வம் சீரியல் முதல் இவர் சீரியலில் நடித்தார் என்றால் அது நல்ல சீரியலாக இருக்கும் என்கிற உத்திரவாதத்துடன் பெண்கள் இன்றும் இவர் நடிக்கும் சீரியலை பார்க்கின்றனர்.

திறமை வெற்றி
கண்மணியில் இவர் திறமையை கண்டு இவருக்கு வெள்ளித் திரை வாய்ப்புக்கள் வர ஆரம்பித்து இருக்கிறது. சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த கதாநாயகன் விருது கண்மணி சீரியலில் இவருக்கு கிடைத்து இருக்கிறது.திறமைக்கு என்றைக்கும் வெற்றி வந்து சேரும் என்பதற்கு காத்து இருந்து வாய்ப்பு கிடைக்கும்போது தனது திறமையை நிரூபித்து ஜெயிக்கும் சஞ்சீவ் சாட்சி.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications