150 ரூபாய் இல்லாம நான் பட்ட கஷ்டம், மேடையில் கண்கலங்கிய சந்தோஷ் நாராயணன்! இவருக்குள் இவ்வளவு சோகமா?
சென்னை: நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த் ஹீரோவாக நடிக்கும் 'மிடில் கிளாஸ்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நவம்பர் 21 அன்று படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டப் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது போராட்டம் நிறைந்த 'மிடில் கிளாஸ்' அனுபவங்களை மனம்திறந்துப் பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

யார் இந்த சந்தோஷ் நாராயணன்
தமிழ் சினிமாவில் 'இண்டிபென்டன்ட்' மற்றும் கிராமிய இசையைத் தன் தனித்துவமான பாணியில் கலந்து ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் தான் சந்தோஷ் நாராயணன். பீட்சா, சூது கவ்வும், அட்டக்கத்தி போன்றப் படங்கள் மூலம் அறிமுகமான இவர், பின்னர் கபாலி, காலா, கர்ணன், ஜிகர்தண்டா போன்றப் படங்களின் மூலம் டாப் இசையமைப்பாளராக உயர்ந்தார்.
தனித்துவம்
இவர் நவீன EDM இசையுடன் மண் வாசனையுள்ள பாடல்களையும் இணைத்து தனது பாடல்களை வழங்குவதில் வல்லவர். இவர் கொடுத்தப் பல ஹிட் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. மிடில் கிளாஸ்' பட விழாவில், தான் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையில் கடந்து வந்தக் கஷ்டமான நாட்களைச் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்தார்:
சேமிப்பு உடைப்பு
"ஒரு முறை எனக்கு பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு வந்தது. முதல் முறையாக வேலைக்காக நான் விமானத்தில் பயணம் செய்தேன். அதற்குக் கிட்டத்தட்ட 5000 ரூபாய் செலவானது. நான் சிடி கவரில் சில்லறை காசு சேமித்து வைத்திருப்பேன். அந்தக் காசை எடுத்துவிட்டால் (ECONOMIC DISASTER) (பொருளாதாரப் பேரழிவு) வந்துவிட்டது என்று அர்த்தம். அந்தக் காசை எல்லாம் எடுத்துக்கொண்டு தான் நான் பெங்களூர் சென்றேன்."
"திரும்பி வரும்போது என்னிடம் 150 ரூபாய் தான் இருந்தது. விமானத்தில் பயணித்தப்போது குலுக்கல் முறையில் ஒரு TV பரிசாக வென்றுவிட்டேன்." பரிசு கிடைத்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அதை TAX கட்டி பெறுவதில் சந்தோஷ் நாராயணன் சிக்கலைச் சந்தித்தார்:
"அந்த TV-க்கு TAX மட்டும் 300 ரூபாய் கட்டச் சொன்னார்கள். ஆனால், என் பர்ஸைத் தொலைத்துவிட்டேன் என்று பொய் சொல்லி, என்னிடம் இருந்த 150 ரூபாயை எடுத்துக்கொடுத்தேன். அதன்பிறகு மீதி 150 ரூபாயை அவர்களேப் போட்டு TV-யை அனுப்பி இருக்கிறார்கள்." "ஆனால், அந்த TV எனக்கு வரவே இல்லை. ஏனென்றால், அந்தப் கொரியருக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை!" என்று உருக்கமாகப் பேசினார்.
ஏதுமற்ற சுழற்சியின் வலி
அந்தச் சமயத்தில் தான் பட்ட கஷ்டம் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், "அந்தச் சமயத்தில் என்னிடம் தொலைபேசியில் ரீசார்ஜ்ம் இல்லை.வாழ்க்கையில் ஒரு 'ஏதுமற்ற சுழற்சி' (Cycle of Nothingness) இருக்கும். அது அப்படியே சென்றுகொண்டுதான் இருந்தது" என்றார்.
"சென்னைக்கு வந்து பொருளாதார ரீதியாக நாம் படும் கஷ்டமெல்லாம் நாமே தேடிக்கொள்வதுதான். ஆனால், நாம் செய்யும் முயற்சி என்றைக்காவது ஒரு நாள் பலனளிக்கும். எனக்குப் பிடித்ததைச் செய்தேன். அதற்கு கிடைத்த மதிப்பு தான் இவை அனைத்தும். ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்" என்று சந்தோஷ் நாராயணன் தனது போராட்ட நாட்களை பகிர்ந்து கொண்டிருப்பது, இன்று வெற்றி பெற்றுள்ள கலைஞர்கள் கடந்து வந்த பாதையை காட்டுகிறது.
-
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications