மகளின் ரகசிய கல்யாணம்.. சரண்யா பாக்யராஜின் காதல் டூ கல்யாணம்.. நீரடித்து நீர் விலகுமா என்ன: பிரபலம்
சென்னை: பாரிஜாதம் படம் பெரிதாக பேசப்பட்டாலும், சரியாக ஓடவில்லை.. அந்த படம் நன்றாக போயிருந்தால் அடுத்தக்கட்டத்துக்கு சரண்யா நிகர்ந்திருப்பார், நிறைய படங்களிலும் நடித்திருப்பார். ஆனால், எம்ப்ராயிடரி, பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு, இப்போது திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.. காதல் திருமணத்தை முதலில் ஏற்காவிட்டாலும், பிறகு மகளை பெற்றோர் அரவணைத்து கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பாக்யராஜ் பேசுகையில், "என்னுடைய மகளின் காதலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஜாதி, மதம், பணம் எல்லாவற்றையும் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது. என் பொண்ணு தனியாக போனதால் நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம். ஆனால் அவள் கர்ப்பமாக ஆகிவிட்டார் என்று சொன்னதும் மனசு தாங்க முடியல.

அப்புறம்தான் பூர்ணிமா போனாங்க. பையன் பிறந்து இருக்கான்னு சொன்னதுமே நான் ஓடிப்போய் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். நான் தான் கையில முதல்ல அவனை வாங்கினேன். இப்போ அவனை பார்க்காமல் என்னால இருக்க முடியாது. அவனுக்கும் நான் இல்லாம இருக்க முடியாது என்று உணர்வுப்பூர்வமாக கூறியிருந்தார்.
யார் மாப்பிள்ளை
இப்படியொரு பேட்டியை பாக்யராஜ் அப்போது தந்ததுமே மொத்த பேரும் ஆச்சயரிப்பட்டார்கள்.. சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? யார் மாப்பிள்ளை? என்ற தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தன.
அதேபோல சரண்யாவும் முதல்முறையாக, ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நான் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தேன். கடைசி நேரத்தில் என் அம்மாவும், அப்பாவும் காப்பாற்றிவிட்டார்கள்... இப்போது எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.. என்னுடைய குழந்தையை கவனித்துக்கொண்டு, பிசினஸையும் கவனித்து வருகிறேன். நாம் ஒரு குழந்தைக்கு அம்மாவாகும்போதுதான், நம்முடைய அம்மாவும், அப்பாவும் இப்படித்தானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாங்க என்று புரிகிறது
ரீ என்ட்ரி சரண்யா
நான் செய்த தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள், என்னாலும் மன்னிக்க முடியவில்லை. மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன். என் மனசாட்சி உறுத்தி கொண்டேயிருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பிறகு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், சரண்யா சொன்ன பேட்டி விவரங்களை பகிர்ந்திருந்தார்.. அதில், "தாய் எட்டடி பாய்ந்தால், மகள் 16 அடி பாய்வார்.. ஆரம்பத்திலேயே நல்ல பாவனையுடன், நல்ல படத்தில் நடித்திருந்தார் சரண்யா.. என்ன துரதிருஷ்டமோ, அவருக்கு முதல் படமே சக்ஸஸ் இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில், சரண்யா ரீ என்ட்ரி தருவார் என்று நம்பலாம் என்ற நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
முதல் படம் எதிர்பார்ப்பு
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக பிருதிவிராஜ், சரண்யா பாக்யராஜ் ஹீரோயினாக நடித்திருந்தனர்.. பாரிஜாதம் படம் பெரிதாக பேசப்பட்டது, ஆனால், படம் நன்றாக இருந்தும் ஓடவில்லை..
பிருதிவிராஜ்க்கு சினிமாவை நன்கு தெரியும், மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் அப்போதுதான் நடிக்க வந்திருக்கிறார்.. சினிமாவில் இன்னும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும் குறிக்கோளிலும் இருந்தார்.
பாரிஜாதம் சிறந்த நடிப்பு
அதுமட்டுமல்லாமல், காதல், கல்யாணம் என்ற வட்டத்துக்குள் சுருங்கிவிட நினைக்கவில்லை. எனவே, பாரிஜாதம் படத்தில் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து நடித்தார். இந்த படத்துக்கு பிறகு தான் நினைத்ததை போலவே, அடுத்தடுத்த படங்களில் பிருதிவிராஜ் நடித்து, முன்னணி நடிகரானார்.. நிறைய விருதுகளையும் பெற்றார்.. படங்களையும் டைரக்ஷன் செய்துகொண்டிருக்கிறார்..
ஆனால், சரண்யா அப்படி நினைக்கவில்லை என்று நான் கேள்விப்பட்டேன்.. ஈர்ப்பு காரணமாக பிருதிவிராஜை காதலித்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசைப்பட்டுள்ளார்..
பெற்றோர் அட்வைஸ்
பிறகு காதல் தோல்வியால் தற்கொலை வரை சென்றதாகவும், பிறகு அவருக்கு குடும்பத்தினர் புத்திமதி சொல்லி அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. அதற்கு பிறகு சரண்யாவையும் அதிலிருந்து மீண்டு, அடுத்தடுத்து தன்னுடைய படிப்பு, வேலையில் இறங்கிவிட்டார்.
பாக்யராஜின் உதவியாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. ஆனால், இதை பாக்யராஜ் தரப்பில் ஏற்கவிலலை.. காரணம், தன்னுடைய மகளை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும், பெரிய இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று பல கனவுகளில் இருந்தனர்.. எனினும் மகளுக்கு குழந்தை பிறந்ததுமே ஏற்றுக் கொண்டார்.. நீர் அடித்து நீர் விலகாது என்பார்கள்.. என்ன இருந்தாலும் செல்ல மகளாச்சே.. பெற்றோர் இருவருமே மகளை அரவணைத்து கொண்டார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications