சரத்குமாரும், ராதிகாவும், மருமகனை அவமதித்தனரா? குடும்ப போட்டோவுலகூட காணோமே? அப்ப வரலட்சுமி?: பிரபலம்
சென்னை: புதுமருமகனை தன்னுடைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டாரா சரத்குமார்? என்று இணையவாசிகள் சந்தேகம் எழுப்பியிருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.. இது தொடர்பான வீடியோ ஒன்றிலும் பேசியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "பிஸியாக படங்களில் நடித்து கொண்டிருந்த வரலட்சுமி சரத்குமார், " திடீரென இவர்தான் என்னுடைய பாய்பிரண்டு, இவரைத்தான் விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என்று அறிவித்து, நிக்கோலாய் சச்தேவ்வை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். இதையடுத்து, பாங்காங்கில் வரலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார் நிக்கோலாய்.

யார் இந்த நிக்கோலாய்? மும்பையில் புராதன பொருட்களை விற்பனை செய்யும், பிரம்மாண்ட ஷோரூம் நடத்தி வருகிறார்.. மும்பையின் மிகவும் பிரசித்தி பெற்ற கோடீஸ்வரர்கள், இந்த ஷோரூமுக்கு வந்துதான் பொருட்களை வாங்குவார்களாம். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. வயதுக்கு வந்த மகள் ஒருவர் இருக்கிறார். இந்த மகளை வைத்து கொண்டுதான், வரலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார்.
வீடியோக்கள்: திருமணத்துக்கு பிறகு ஜோடிகள் இருவரும் பல வெளிநாடுகளுக்கு சுற்றித்திரிந்தனர்.. இந்த வீடியோக்களை எல்லாம் வரலட்சுமி தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டேயிருந்தார்.
இந்நிலையில், இவர்களுக்கு இந்த முறை தலைப்பொங்கல் வந்துள்ளது.. பொதுவாக இந்து முறைப்படி, குறிப்பாக சரத்குமார் குடும்ப வழக்கப்படி, தலைப்பொங்கலுக்கு வருபவர்களுக்கு சீர்வரிசைகளை செய்து, சந்தோஷமாக தம்பதிகளை வழியனுப்பி வைப்பார்கள். அந்தவகையில் நிக்காலாய்யும், வரலட்சுமியுடன் தலைப்பொங்கலுக்கு வந்திருந்தார்.
தலைப்பொங்கல்: கொட்டிவாக்கத்திலுள்ள சரத்குமாரின் பங்களாவில் தலைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சரத்குமாரின் முதல் மனைவி மனைவி சாயா, சரத்குமாரின் மற்றொரு மகள், இரண்டாவது மனைவி ராதிகா, அவரது பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினார்கள். அனைவரும் சேர்ந்து போட்டோவும் எடுத்து கொண்டார்கள்.. ஆனால், அந்த போட்டோக்களில் நிக்கோலாய் மட்டும் இடம்பெறவில்லை.. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
இதைப்பார்த்த ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த படம் ஒன்றில், அப்பா-மகன் என 2 வேடம் ஏற்றிருப்பார். இதில் மகனை தள்ளி வைத்திருப்பார் அப்பா சரத்குமார். அப்போது குடும்ப போட்டோ எடுப்பதற்காக, மகன் சரத்குமாரை, அம்மா ராதிகா அழைப்பார். அதற்கு சரத்குமார், "குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் வந்தாச்சு, நீ போட்டோ எடுப்பா" என்று சொல்லி மகனை தள்ளி வைப்பார்.
ராதிகா சரத்குமார்: இந்த மீம்ஸை பகிர்ந்த நெட்டிசன்கள், நிக்கோலாயையும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீக்கிவிட்டாரா சரத்குமார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு சரத்குமாரும், வரலட்சுமி சரத்குமாரும்தான் பதிலளிக்க வேண்டும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications