விஜயகாந்த் செய்ததை மறக்க முடியுமா? படத்தையே நிறுத்திட்டாரு! சண்முக பாண்டியன் முன்பு சரத்குமார் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்திருக்கும் கொம்புசீவி திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது விஜயகாந்த் தனக்காக செய்த உதவி குறித்து உருக்கமாக சரத்குமார் பேசியிருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் என்று சொன்னாலே அவர் செய்த உதவிகள் குறித்து பலர் பேசுவதை கேள்விப்பட்டிருப்போம். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் மற்றும் டெக்னீசியன்கள் என எல்லா தரப்பட்டவர்களுக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்திருக்கிறார். அதோடு தன்னுடைய ஆபீஸில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர் என்று அவரிடம் உதவி வாங்கிய பலரும் அவர் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் சரத்குமார்.

Sarathkumar Vijayakanth

நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு பிறகு கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். இப்போ வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சரத்குமாரின் வாழ்க்கையில் கேப்டன் பிரபாகரன் படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த படத்தில் கொஞ்ச நேரம் வந்திருந்தாலும் அந்த படத்திற்கு முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்திருப்பார்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் தனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி சரத்குமார் ஏற்கனவே சில இடங்களில் சொல்லியிருந்தாலும் இப்போது கொம்பு சீவி திரைப்படத்தின் பிரமோஷனிலும் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதாவது சரத்குமார் விஜயகாந்த் அறிமுகமானது புலன்விசாரத்தை படத்தில் தானாம். அந்த படத்தின் ஷூட்டிங்கில் சரத்குமார் கலந்து கொண்ட போது தன்னுடைய மேக்கப் மேனிடம் சென்று இவருக்கு மேக்கப் போட சொல்லி விஜயகாந்த் அறிமுகப்படுத்தினாராம்.

பிறகு அவர்களுடைய நட்பு தொடங்கி இருக்கிறது. அதற்குப்பிறகு சரத்குமாருக்கு ஒரு பெரிய ஆக்சிடென்ட் ஆகி ஆறு மாதங்கள் அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் கேப்டன் பிரபாகரன் படம் உருவாக இருக்கிறது. அப்போது சரத்குமார் வந்து நடிக்க வேண்டும் என்று ஆறு மாதமாக அந்த பட சூட்டிங் நிறுத்தி வைத்து விட்டாராம். விஜயகாந்த் இடத்தில் வேற எந்த நடிகர்கள் இருந்திருந்தாலும் இதை செய்திருக்க மாட்டார்கள் என்று விஜயகாந்த் குறித்து சரத்குமார் பெருமையாக பேசி இருக்கிறார்.

மேலும் சரத்குமார் பேசும் போது அந்த படத்தில் மட்டுமல்ல எனக்கு அதற்கு பிறகும் பல படங்களில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் யாரேனும் கதை சொல்ல போனால் இந்த கதைக்கு சரத்குமார் சரியா இருப்பான் அங்க போங்க என்று அனுப்பி வைப்பாரு. அதுபோல எனக்கும் போன் செய்து இப்படி கதை சொல்ல ஒருத்தர் வராரு உனக்கு அந்த கேரக்டர் சரியா இருக்கும்னு சொல்லுவாரு.

அவர் சொல்லி நான் நடிச்ச படங்கள் எனக்கு நல்ல வெற்றியை கிடைத்திருக்கிறது. இப்ப இருக்குற ஹீரோக்கள் எல்லாம் இப்படி சக நடிகர்களுக்கு பண்ணுவாங்களா என்பது எனக்கு தெரியல. ஆனால் விஜயகாந்த் தான் மட்டும் முன்னேறாமல் தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றி அழகு பார்த்தவர் என்று பெருமையோடு பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+