வீட்டுக்கு வரும்போது ராதிகா எப்படி? நடையில் தெரியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுக்கு வரும்போது ராதிகா எப்படி எந்த மனநிலையில் வருவார் என்று அவர் நடையில் தெரிந்துவிடும் என்று சொன்னார் சரத்குமார்.

சன் டிவியின் பொங்கல் சிறப்பு வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நட்சத்திர ஜோடியாக கலந்துக்கொண்டனர் ராதிகாவும், சரத்குமாரும்.

அப்போது பேசிய சரத்குமாரிடம் ராதிகா வீட்டில் எப்படி என்று கேட்ட போதுதான் மேற்கண்டவாறு சொன்னார் சரத்குமார்.

கேட்டை சாத்தும்போது

கேட்டை சாத்தும்போது

நான் வீட்டுக்கு வந்தால் வேலைகளை அத்தோடு மறந்து விடுவேன். மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை செட்டுக்கு சென்றால் அல்லது வேலையின் போது மட்டும்தான் யோசிப்பேன். நான் வீட்டில் டிவி பார்த்துகிட்டு இருப்பேன். அப்போ இவங்க ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வருவாங்க கேட்டை சாத்திட்டு வரும்போது இவங்க மூட் பத்தி தெரிஞ்சுக்குவேன்.

என்னை கடந்து

என்னை கடந்து

டக்கு டக்குன்னு நடந்து வந்து என்னை கடந்து போயிட்டாங்கன்னா ஏதோ பிரச்சனை..அதை டிஸ்கஸ் பண்ண விரும்பறாங்க இல்லை என்மேல காண்பிக்க வந்துருக்காங்கன்னு அர்த்தம். நான் போன் போட்டு எதாவது பிரச்சனையான்னு கேட்டுட்டு இவங்கிட்டே போவேன். டக்கு டக்குன்னு மெதுவா நடந்து வந்தா டயர்டா இருக்காங்கன்னு அர்த்தம். கோபமா இருக்கும்போது அமைதியா இருந்துடலாம்னு இருந்துருவேன்னு சரத்குமார் சொன்னார்.

வானம் கொட்டட்டும்

வானம் கொட்டட்டும்

வானம் கொட்டட்டும் படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாகவும், கதை நல்ல கதையாக இருந்ததால் இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இருவருமே கூறினார்கள்.நடிக்கும்போது இருவரும் தங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகத்தான் செட்டில் இருப்போம் என்றும் கூறினார்கள். ராதிகா செட்டில் மற்றவர்களிடம் அரட்டை அடிப்பார் என்று கூறினார் சரத்குமார்.

ஐஸ் வைப்பாரா

ஐஸ் வைப்பாரா

கோபமாக இருக்கும்போது ஐஸ் வைப்பாரா மேம் என்று கேட்க, நிறைய வைப்பார் என்று ராதிகா சொன்னார். சேச்சே..நான் அப்படி இல்லை .. உண்மையே பேசுபவன். கோபமா இருக்கும்போது ஐஸ் வச்ச இன்னும் அது புகையும். எதுக்கு ஐஸ் என்று கேட்டார் சரத்குமார். இல்லை இல்லை.. இவர் தாஜா பண்றதில் பெரிய ஆள். வெளியூரில் இருப்பார். திடீர்னு போன் பண்ணி கதவைத் திற யாரோ உன்னை பார்க்க வந்து இருக்காங்கன்னு சொல்லுவார்.

நான் கதவைத் திறந்து பார்த்தால் இவர் நிறைய பூக்களோடு நிற்பார். கிஃப்ட் குடுக்கறதில் இவர் மன்னன் என்று ராதிகா சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+