நாளையோடு 28 வருஷம்.. சூரிய வம்சம் தான் என் அடையாளம்! நெகிழ்ந்து பேசிய சரத்குமார், தேவயானியின் ரியாக்ஷன்
சென்னை: நடிகர் சரத்குமார் தேவயானி ஜோடியாக நடித்த சூரிய வம்சம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை முன்னுதாரணமாக கொண்டு இப்போது பலர் வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய வாழ்க்கையின் வெற்றிகளுக்கு இந்த திரைப்படப் பாடல்களை பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடித்த 3BHK படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூரியவம்சம் படம் பற்றி நெகிழ்ந்து பேசுகிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் காலம் கடந்தும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சில படங்கள் பார்க்கும்போது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் முதல் முறை பார்ப்பது போன்று டிவி முன்பு உட்கார்ந்து இருப்பவர்கள் ஏராளமானோர். அதிலும் 90ஸ் காலகட்டத்தில் வந்த ஒரு சில திரைப்படங்கள் இப்போதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் சூரியவம்சம் திரைப்படத்திற்கென்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஃபேவரைட் சின்ராசு
சூரிய வம்சம் திரைப்படத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழும் சின்ராசு வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றம் வருகிறது என்பது முக்கிய கதையாக இருக்கும். ஊர் நாட்டாமையாக இருக்கும் அப்பாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் சின்ராசு தான் காதலித்த காதலிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதால் அப்பாவிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டாலும் பரவாயில்லை என்று அந்த காதலிக்காக காதலை தியாகம் செய்வார்.
சூரியவம்சம் படம் கதை
ஆனால் அவருடைய நல்ல மனதை புரிந்து கொண்ட நந்தினி (தேவயானி) சின்ராசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். பெற்ற தந்தையே நீ உதவ மாட்ட உதவாக்கரை என்று திட்டினாலும் அனைவர் முன்பும் ஆலமரமாக எழுந்து நிற்கும் சின்ராசு நந்தினி ஜோடி இப்போது உள்ள இளம் தலைமுறைகள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்கள். இந்த திரைப்படம் வெளியாகி நாளையுடன் 28 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து நடிகர் சரத்குமார் பேசிய பேட்டி இணையத்தில் வருகிறது.
சரத்குமார் பேட்டி
அதில் அவர் பேசும்போது நான் எத்தனையோ படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் சூரியவம்சம் திரைப்படம் மக்கள் மனதில் இப்போதும் நிலைத்து நிற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படம் தான் என்னுடைய அடையாளம். நாளையோடு சூரியவம்சம் படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிறது. ஆனால் இப்போதும் அந்த படத்தை பலரும் முன்னுதாரணமாக எடுத்து பேசும்போது கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
நெகிழ்ந்த சரத்குமார்
அப்போது வந்த சூரியவம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் எல்லாம் எவர்கிரீன் படங்கள் தான். நான் என்னுடைய படத்தை மட்டும் சொல்கிறேன். அந்த நேரத்தில் பல படங்கள் நல்ல கருத்துக்களையும் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தேவயானி உடன் நான் நடித்த சூரியவம்சம் படம் இப்போதும் பலராலும் பாராட்டப்படுகிறது. அந்த திரைப்படத்தை போலவே இப்போது நான் நடித்த படம் "3BHK" உருவாகி இருக்கிறது.

சரத்குமார் வேண்டுகோள்
இந்த திரைப்படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. குடும்பத்துடன் இணைந்த சமூக, உளவியல், சிக்கல்களை இந்த திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. அதை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். சூரியவம்சம் படம் பற்றி பேசும்போது தேவயானியும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் தேவயானி நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கும் அவருடைய கணவர் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் ஏற்பட்டது அதனால் தேவயானிக்கும் இந்த படம் எப்போதுமே ஸ்பெஷல் தான்.












Click it and Unblock the Notifications