எனக்கு வாழ்க்கை கொடுத்ததே கேப்டன் தான்.. உருகும் சரத்குமார்.. ஒரு போன் காலில் மாறிய வாழ்க்கை
சென்னை: வெள்ளி திரையில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் சின்ன திரை நிகழ்ச்சிகளிலும், விளம்பரங்களிலும் அனைத்து துறைகளிலும் ஜொலித்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமார், விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
என்னுடைய வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று நினைத்திருந்த நேரத்தில் எனக்கு விஜயகாந்த் சொன்ன வார்த்தை பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.
தனக்கு போட்டியாக இருக்கும் நடிகர் கூட நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தவர்தான் விஜயகாந்த் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகாந்த் தான். பல நடிகர்கள் கூட நடிக்கும் நடிகர்களால் தூற்றப்படும் போது இவருக்கு போட்டியாக நடித்த நடிகர்கள் கூட விஜயகாந்தை இப்ப வரைக்கும் பெருமையாக தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
காரணம் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதும் சரி அரசியலில் காலூன்றிய பிறகும் சரி தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு சலிக்காமல் உதவி செய்து இருக்கிறார். அதோடு சினிமாவில் தன்னோடு நடிப்பவர்கள் பலருக்கும் கேட்காமல் கூட பல நேரங்களில் உதவி செய்திருக்கிறாராம். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக இவருக்கு அதிகமான வரவேற்பு இருப்பதால்தான் இவரால் எதிர்க்கட்சி தலைவராக தேர்வாக முடிந்தது.
விஜயகாந்த் நடித்த திரைப்படங்களில் அனைத்திலும் சண்டை காட்சிகள் தவறாமல் இடம் பிடித்து விடும். அதிலும் தன்னுடைய மாஸான பெர்பார்மன்ஸை காட்டி இருப்பார். அதனால் தான் அவரை அப்படி பார்த்த ரசிகர்களால் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் பார்க்க முடியவில்லை என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் பற்றி சரத்குமார் மேடையில் பேசியிருக்கிறார். சரத்குமார் விஜயகாந்த் உடன் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். சரத்குமார் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் சரத்குமார் மற்றும் விஜய்காந்த் இணைந்து நடித்த கேப்டன் திரைப்படம் இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரைட் தான்.
இந்த நிலையில் சரத்குமார் விஜயகாந்த் பற்றி பேசியதில், பொதுவா ஒரு நடிகர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவரை அடுத்து மற்ற நடிகர்கள் வந்து கொண்டிருப்பார்கள் ஆனால் அவரின் வளர்ச்சிக்கு வளர்ந்த நடிகர் தடையாக இருப்பார். ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை. தனக்கு அடுத்து வரும் நடிகர்களும் நல்ல நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் தான் விஜயகாந்த் .
இந்த மாதிரி தான் சரத்குமார் வளர்ச்சிக்கும் விஜயகாந்த் முக்கியமான காரணமாக இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். அதோடு ஒரு இயக்குனர் விஜயகாந்த் வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அந்த கதையை கேட்ட விஜயகாந்த் உடனே சரத்குமார் போன் செய்து," சரத் உனக்கு ஏத்த மாதிரி ஒரு கதை இருக்கு, அதை நீ பண்ணினால் தான் நன்றாக இருக்கும்" என்று கூப்பிட்டு சொல்லி இருக்கிறார்.
இதைக் குறிப்பிட்டு பேசிய சரத்குமார் எனக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் தான். அன்னைக்கு போன் பண்ணி எனக்கு கொடுத்த வாய்ப்பால் என்னுடைய வாழ்க்கையே மாறியது. அதற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அந்த நன்றியை மறக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications