மோசமான சண்டை.. பிரிந்து விடலாம்னு முடிவு! சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா சொன்ன வார்த்தை! செந்திலின் பதில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஸ்ரீஜா மற்றும் செந்தில் தம்பதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திருமண வாழ்க்கையில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர். அது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விடவும் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விடுகிறார்கள். திரைப்படங்கள் வருடத்திற்கு ஒருமுறை வெளியாகும். ஆனால் சின்ன திரையில் நடிகர்கள் தினமும் பார்க்கப்படுவதால் மக்கள் மனதில் அவர்கள் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்கள்.

அதிலும் ஒரு சில நடிகர்கள் ஒன்றாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அப்படி திருமணம் செய்து கொண்ட பல தம்பதிகள் பல வருடங்களாக சேர்ந்து வாழ்வது கிடையாது. காதலிக்கும் போது இருக்கும் புரிதல் மற்றும் காதல், திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடாக மாறி பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இதில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ஸ்ரீஜா மற்றும் செந்தில் தம்பதி விதிவிலக்காக இருக்கிறார்கள்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக புகழின் உச்சத்தில் இருந்த ஸ்ரீஜா மற்றும் செந்தில் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் அந்த சீரியல் மூலமாக உருவாகிவிட்டனர். விஜய் டிவி வரலாற்றில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் தங்களுடைய பத்தாவது வருட திருமண நாளை கொண்டாடிய செந்தில் மற்றும் ஸ்ரீஜா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். அதில் செந்தில் பேசும் போது, எனக்கு புரிதலில் சில குழப்பங்கள் இருந்தது. அவளுக்கும் புரிதலில் சில குழப்பங்கள் இருந்தன.
இது எல்லா காதல் திருமண வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய பிரச்சனைதான். கல்யாணத்திற்கு முன்னதாக எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு இடையே புரிதலில் சின்ன குழப்பம் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் புரிதல் சரியாகி எங்களுக்குள் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. இப்போது எங்களுடைய மகன் அந்த புரிதலை இன்னும் அதிகமாக மாற்றிவிட்டான்.
காதல் திருமணம் ஆக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி கல்யாணம் செய்து கொண்ட முதல் மூன்று வருடங்கள் நீங்கள் எப்படியாவது கடந்து விட வேண்டும். அந்த மூன்று வருடங்களை கடந்துவிட்டால் உங்களுக்குள் பிரிவு வராது. காரணம் அவரைப் பற்றி உங்களுக்கும் உங்களைப் பற்றி அவருக்கும் இடையே புரிதல் ஒரு நிலைக்கு வந்திருக்கும்.
எங்களுக்குள் இப்போது சுமுகமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என்று செந்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அதைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீஜா நான் கேமராவுக்காக வேண்டுமென்றால் பொய் சொல்லலாம். ஆனால் உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்து இருக்கிறது. மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். இப்போதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் மகன் பிறந்து விட்டதால் சண்டைக்கு அதிகமான நேரம் கிடைக்கவில்லை. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எல்லாம் மிகவும் மோசமான சண்டை போட்டு இருக்கிறோம். அதனால் சில முறை பிரிந்து விடலாமா? என்று கூட சில முறை யோசித்து இருக்கிறோம். ஆனால் அதனை கடந்து மீண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று எனக்குள் தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன்.
காரணம் இந்த உறவு ரத்த சம்பந்தம் இல்லை அல்லவா? உங்களது உறவிலும் அந்த மேஜிக் வந்துவிட்டால், என்ன ஆனாலும் சரி அந்த உறவு நம்மை விட்டுப் போகாது என்று அந்த பேட்டியில் ஸ்ரீஜாவும் பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications