சரிகமபவில் பைனலுக்கு தேர்வான அடுத்த போட்டியாளர்! மேடையில் நடந்த சம்பவம்! பீல் பண்ண வச்சிட்டாங்களே!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இசை நிகழ்ச்சி 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 5, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல சுற்றுக்களைக் கடந்து வந்த இந்த நிகழ்ச்சியில், மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வார 'டூயட் சுற்று' நிகழ்ச்சி, பல எதிர்பார்ப்புகளையும், உணர்ச்சிப் போராட்டங்களையும் ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது இறுதிப் போட்டியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இறுதிப் போட்டிக்குத் தேர்வானவர்கள்
இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் வரை ஒரு போட்டியாளர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்தார். அவர் தான் இலங்கைப் பெண் போட்டியாளரான சுஷாந்திகா*. அவருடையப் பாடல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு பலரின் இதயத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகரி: சரிகமப சங்கமம் காரணமாகக் கடந்த வாரம் 2வது போட்டியாளர் தேர்வு செய்யப்படாத நிலையில், இந்த வாரம் டூயட் சுற்றில், நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்று, ஸ்ரீகரி இரண்டாவது இறுதிப் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.
மேடையில் நெகிழ்ச்சியான தருணம்
போட்டியாளர் ஸ்ரீகரியின் தேர்வில், மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ரீகரியின் தாய், தந்தை இருவரும் முதன்முறையாக இன்றுதான் தன்னுடைய மகனின் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சரிகமபா அரங்கத்திற்கு வந்திருந்தார்கள். இப்படி இருக்க, தனது பெற்றோரின் முன்னிலையில் ஸ்ரீகரி இரண்டாவது இறுதிச் சுற்றுப் போட்டியாளராகத் தேர்வானது, அவருக்கு உணர்ச்சிகளால் வார்த்தை இல்லை என்னும்படியாக இருந்தது. அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்ததைக் கண்ட அரங்கமே நெகிழ்ந்து போனது.
இந்த சீசனின் சுவாரசியங்கள்
சரிகமப நிகழ்ச்சியானது, வெறும் பாட்டுப் போட்டியாக மட்டுமின்றி, போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் அவர்களின் இசைப் பயணத்தின் பின்னணி ஆகியவற்றையும் ஆழமாகப் பதிவு செய்து வருகிறது. இந்த சீசனில் பல்வேறுப் பின்னணியில் இருந்து வந்தப் போட்டியாளர்கள் கலந்து கொண்டு, தங்கள் தனித்துவமானக் குரல் மற்றும் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தனர். இலங்கைத் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டது, நிகழ்ச்சியின் பலதரப்பட்டப் பார்வையைக் குறிக்கிறது. அதிலும் சாமானிய பெண்ணான பவித்ரா கணவனை இழந்த பிறகு தன்னுடைய கணவரின் ஆசைக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருடைய நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அவருக்கு சினிமாவில் பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கோல்டன் பெர்ஃபார்மன்ஸ்
இந்த வாரம் டூயட் சுற்றில் மட்டும் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் கோல்டன் பெர்ஃபார்மன்ஸ் பாராட்டைப் பெற்றுக் கொண்டது, இறுதிப் போட்டிக்குக் கடும் போட்டி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேவைப்படும் நிலையில், சுஷாந்திகா மற்றும் ஸ்ரீகரி ஆகியோர் தேர்வாகிவிட்டனர். இன்னும் மூன்று போட்டியாளர்கள் யார் என்ற அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்தடுத்தச் சுற்றுகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications