மூச்சு விடாமல் பாடிய சிறுமி.. உச்சி முகர்ந்து சரண் சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த சரிகமப மேடை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் இசை ஜாம்பவான்களான பாடகர் எஸ்பிபி, யேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்கள் பாடும் லெஜென்டரி ரவுண்டு நடைபெறுகிறது. அதில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
சின்னத்திரையில் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனம் கவர்ந்து வருகிறது. அதில் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு தனி இடம் இருக்கிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் இப்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அர்ச்சனா தொகுப்பாளராக இருக்கிறார். அதுபோல பாடகர் ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி சரண் , ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித்தியாசமான ரவுண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் இசை ஜாம்பவான்களான பாடகர் எஸ் பி பி, யேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்கள் பாடும் லெஜென்டரி ரவுண்டு நடைபெற உள்ளது. அதுபோல இந்த வாரத்தில் சிறப்பு விருந்தினராக கங்கை அமரன், யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் பல குழந்தைகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு பாடகர்களும் ஒவ்வொரு தனித்திறமையை காட்டி அசத்தி வருகிறார்கள். அதில் மஹதி பாடிய பாடல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. சரிகமப இசை குழுவில் முக்கியமான போட்டியாளராக இருக்கும் மஹதி இந்த வாரத்தில் பாடகர் எஸ்பிபி பாடி நடித்த "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி இருக்கிறார்.

அதை பார்த்து வியந்து போன சரண் மஹதியை தூக்கி உச்சியில் முத்தம் கொடுத்து உள்ளம் மகிழ்ந்திருக்கிறார். அதோடு நான் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். என்னுடைய அப்பா எஸ்பிபி பல மேடைகளில் இந்த விஷயத்தை சொல்லி இருப்பார். அதாவது இந்த பாடல் பாடிய போது எஸ்பிபி மூச்சு விடாமல் பாடவில்லை. ஆனால் படத்தில் தான் அவர் மூச்சு விடாமல் பாடியது போல காட்டப்பட்டது.

மஹதி இந்த பாடலை மூச்சு விடாமல் பாடி இருக்கிறார். அதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இந்த சின்ன வயதில் இவர் இவ்வளவு திறமையாக இருப்பது பாராட்டப்பட வேண்டியது என்று கூறி இருக்கிறார். மேலும் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கங்கை அமரன் மஹதியை வாழ்க வாழ்க என வாழ்த்துவதாக கூறி ஆசீர்வதித்தார்.

சரிகமப நிகழ்ச்சிக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. சோஷியல் மீடியாக்களிலும் இந்த குழந்தைகள் பாடும் பாடல் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதுபோல டிஆர்பியிலும் சரிகமப நிகழ்ச்சி முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த வாரம் குழந்தைகள் ரசிகர்கள் உள்ளம் கவரும் பல பாடல்களை பாடி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications