சரிகமபவில் பாடலால் வியக்க வைத்த பறை இசை கலைஞரின் பேரன்! கண்ணீரோடு தாத்தா சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் அரங்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. இதில் ஒரு போட்டியாளர் பாடிய பாடலை கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் வியந்து போய் இருக்கிறது. அதோடு அந்த குழந்தையின் பின்புலம் கேட்டு அனைவரும் வியந்து போய் இருக்கிறார்கள்.
சாமானியனையும் சாதனையாளனாக்கும் வகையில் தான் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமா துறையில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி திறமையை வெளிக்காட்டிய பலருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களும் முன்னேறும் வகையில் தான் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

சரிகமப நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனியர்களுக்கான சீசன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பு ஜூனியர்களுக்கான நிகழ்ச்சியில் திவினேஷ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த குழந்தைதான் ஆரம்பத்தில் இருந்து பழைய பாடல்களை பாடி அனைவருடைய மனதில் இடம் பிடித்திருந்தார்.
இதனால் இவருடைய வெற்றி பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான ஆடிஷன் நடந்து இருக்கிறது. இதில் பல திறமையான குழந்தைகள் பாடியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சுமன் ராஜ். இவர் "ஆறும் அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல... பொம்பள மனசு தாயா ஆழம்" என்ற பாடலை பாடி நடுவர்களின் பாராட்டைப் பெற்றார்.
அவருடைய குரல் மற்றும் பாடும் விதத்தை பார்த்ததும் நடுவர்கள் இவர் டைட்டில் வின்னர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக இறுதிப் போட்டியாளர் லிஸ்டில் இருப்பார் என்று பாராட்டி இருந்தார்கள். இவர் பாடியதைக் கேட்டு அவருடைய தந்தை மற்றும் தாத்தா இருவரும் கண்கலங்கி அழுதனர். பிறகு சுமன்ராஜ் பேசும்போது நான் இன்று எந்த அளவிற்கு பாடுவதற்கு காரணம் என்னுடைய தாத்தா தான்.
என்னுடைய தாத்தா பறை இசை குழுவை சார்ந்தவர். அவருடைய முயற்சியால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று உருக்கமாக பேச, அவருடைய தாத்தாவை மேடைக்கு வர வைத்திருந்தது. அவருடைய தாத்தா மேடைக்கு வந்ததும் "ஐயா எல்லாருக்கும் வணக்கம். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவங்க. நான் பல இடத்தில் பட்ட அவமானம் கஷ்டம் காரணமாக என்னுடைய பையனை படிக்க வச்சேன். இன்னைக்கு அவனுடைய பையன் இந்த மேடைக்கு வந்து என்னுடைய பறை இசைக்கு ஒரு அடையாளத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

நான் பறை இசை வாசித்து தான் என்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். எனக்கு வேற எதுவும் தெரியாது. அந்த ஒரு இசை தான் என்னுடைய வாழ்க்கையின் அடையாளமாகவே இருந்தது. இன்று பேரன் பாடுவதை பார்த்து நான் அந்த இடத்திலேயே அழுதுட்டேன் என்று கண்கலங்க பேசி இருந்தார். அவருடைய பேச்சைக் கேட்ட நடுவர்கள் இங்கே யாரும் தாழ்ந்தவங்க, உயர்ந்தவங்க என்று இல்லை ஐயா எல்லோரும் சமம் தான் என்று பேசி இருந்தனர்.
இன்னைக்கு உங்களோடு பேரன் இசையால் உங்களையும் உங்கள் பரம்பரையையும் தலை நிமிர வைத்திருக்கிறான். அவன் இன்னும் அதிக தூரம் பயணிக்க போகிறான் என்று பாராட்டி, பிறகு அந்த தாத்தாவை மேடையில் பறை இசையை வாசிக்க வைத்திருந்தனர். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications