'சரிகமப' மேடையில் சோகம்! போட்டியாளர் பாடி கொண்டிருக்கும் போது குடும்பத்தில் நிகழ்ந்த இறப்பு கண்ணீரில் அரங்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியின் இந்த வாரம், போட்டியாளர் அருண் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம், மேடையிலிருந்த அனைவரையும் அதிர்ச்சியிலும், கண்ணீரிலும் ஆழ்த்தியது.

டெடிகேஷன் ரவுண்டில் நிகழ்ந்த துயரம்
இந்த வாரம், டெடிகேஷன் ரவுண்டில், அருண் தன்னுடைய அம்மாவிற்காகப் பாடலை டெடிகேட் செய்து பாடினார். அவர் பாடி முடித்த பிறகு, தொகுப்பாளினி அர்ச்சனா, அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அருண் பாடிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய பாட்டி இறந்துபோய்விட்டாராம். இந்தச் செய்தியை அருணிடம் சொல்ல வேண்டாம் என்று அவருடைய தாய் மறைத்துவிட்டாராம்.
"அருணை ரொம்பவும் ஆசையா வளர்த்தாங்க. அவங்க இப்போ இல்லை என்ற செய்தி தெரிந்தால் அருண் உடைந்து போய்விடுவான். அதனால் அவன்கிட்ட சொல்ல வேண்டாம்," என்று அருணின் தாய் தன்னுடைய சோகத்தையும் மறைத்து, மகனுக்காக நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தார். அருண் பாடி முடித்த பிறகுதான், அர்ச்சனா இந்த விஷயத்தை மேடையில் பகிர்ந்துகொண்டார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கினர். பின்னர், அருணின் பாட்டிக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சரிகமப நடுவர்கள்
'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சி ஏப்ரல் 2025-ல் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாடகி சுவேதா மோகன், இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மற்றும் இசையமைப்பாளர் சரண் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இறுதி கட்ட போட்டியாளர்களாக அருண் உட்படச் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அருணின் வெற்றிப் பயணம்
அருண் ஏற்கனவே ஒரு பேட்டியில், தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பெண்ணின் ஆதரவு மற்றும் தைரியம் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த நடுவர் சுவேதா, அருணின் காதலி அளித்த ஒரு வீடியோவை நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.
காதலியின் ஆதரவுடன் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருந்த அருணின் வாழ்க்கையில், பாட்டியின் மரணம் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது. இந்தச் சோகமான தருணத்திலும், அவரது அம்மாவின் உறுதியான மனது, அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications