SaReGaMaPa : “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” ஹரிஷ் பாடிய பாடல்! காலில் விழுந்த நடுவர்! நெகிழ வைத்த காட்சி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் டவுன் பஸ் பாடல்கள் ரவுண்டு நடைபெறுகிறது. இதில் போட்டியளர்கள் பலருடைய மனம் கவர்ந்த பாடல்களை பாடி வியக்க வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஹரிஷ் என்ற போட்டியாளர் பாடிய பாடல் பலருடைய மனதை, உருக்கியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் அந்த பாடலை கேட்ட நடுவர் எஸ்பிபி சரண் ஹரிஷ் காலில் விழுந்திருக்கிறார். இந்த சம்பவம் பலருடைய மனதை நெகிழ வைத்திருக்கிறது.
பொதுவாக பாடல்கள் பலருடைய ஃபேவரைட். சந்தோசமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி அதில் பாடல் கேட்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை திரைப்படங்கள் பார்க்காதவர்கள் கூட பாடலை கேட்டு ரசித்து வருகிறார்கள். இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பாடல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஹரிஷின் உணர்வுபூர்வமான பாடல்
அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனாலே இந்த நிகழ்ச்சியில் சரிகமப சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து சீனியர்களுக்கான நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் 26 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட போகிறது. அதில் இந்த வாரம் டவுன் பஸ் பாடல்கள் ரவுண்டு நடைபெறுகிறது. பொதுவாகவே பலருடைய ப்ளே லிஸ்டில் டவுன் பஸ் பாடல்கள் இடம் பிடித்து இருக்கும். இளையராஜா முதல் கொண்டு இப்போதுள்ள பாடவர்களின் பாடல்களும் அந்த வரிசையில் இடம் பிடித்து இருக்கும்.
சிறப்பு விருந்தினர்கள்
சில பாடல்களை கேட்கும்போது அப்படியே நம்மை மறந்து அதில் இணைந்து விடுவோம் அது பன்ற பாடல்களை தேர்ந்தெடுத்து பஸ் பயணத்தின் போது பல டிரைவர்கள் பாடலை ஒழிக்க விடுவார்கள். அது போல பலருடைய மனம் கவர்ந்த பாடல்களை இந்த வாரம் சரிகமப வில் போட்டியாளர்கள் பாடுகிறார்கள். அதில் பாடகர் ஹரிஷ் இந்த வாரம் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" என்ற பாடலை பாடி இருக்கிறார். அந்த பாடல் ஏசுதாஸ் பாடியது. அந்த பாடலுக்கு இசை அமைத்தது இளையராஜா தான். இந்த பாடல் இப்போது ஹரிஷ் குரலில் கேட்டதும் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
அப்போது நடுவராக இருக்கும் எஸ்பிபி சரண் ஹரிஷ் காலில் விழுந்து இந்த பாடலை உன்னுடைய குரலில் கேட்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார். அதுபோல இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் இந்தப் பாடலை நான் அதிகமான முறை என்னுடைய பஸ் பயணத்தில் போட்டு இருக்கிறேன் நான் பஸ்சில் போகும்போது போடும் பாடலை பஸ்ஸில் வரும் பயணிகள் எல்லாம் நீங்கள் இவ்வளவு அழகாக செலக்ட் பண்ணி வச்சிருக்கீங்க என்று பாராட்டுவாங்க. அந்த அருமையான பாடல்கள் வரிசையில் இந்த பாடல் கண்டிப்பா இடம் பிடித்திருக்கும். அந்த பாடலை பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்தப் பாடல் குறித்த பிரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் ஹரிஷை பாராட்டி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் ஹரிஷ் பைனல் போட்டியாளராக போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் கருத்து கூறி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications