SaReGaMaPa: "எள்ளு வய பூக்களே” பாடலை கண்ணீரோடு பாடிய பவித்ரா.. சைந்தவி கொடுத்த ரியாக்ஷன்! கலங்கிய அரங்கம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி, இந்த வாரம் 'ஃபோக் பாடல்கள் ரவுண்டு' என்ற சவால்மிக்கச் சுற்றை எட்டியுள்ளது. நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் ஒளிபரப்பாகும் இந்தச் சுற்றில், மூன்றாவது இறுதிப் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியாளர் பவித்ரா பாடிய ஒரு பாடல், அரங்கத்தையே சோகத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

பவித்ராவின் சோகம்
பவித்ரா, திறமையான பாடகியாக இருந்தபோதிலும், அவரதுத் தனிப்பட்ட வாழ்வில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேரிழப்பைச் சந்தித்தார். பவித்ராவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விபத்து ஒன்றில் காலமானார். திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், அவருடைய திடீர் இழப்பு பவித்ராவின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உடைத்துவிட்டது.
கனவை நிறைவேற்ற பயணம்
அந்த இக்கட்டான நேரத்தில் தான், "தன்னுடையக் கணவரின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்" என்ற ஒற்றை நம்பிக்கையுடன் பவித்ரா சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே, தனதுத் தனித்துவமான குரல் மற்றும் போராடும் மனப்பான்மையால் பவித்ரா பலருடைய நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார். ஏற்கனவே, அவருக்கு ஒரு திரைப்படத்தில் பாடுவதற்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சைந்தவி சாயல் இல்லாத பாடல்
இந்த வாரப் ஃபோக் ரவுண்டில், பவித்ரா பாடகி சைந்தவி பாடிப் பிரபலமான "எள்ளு வய பூக்களையே" என்ற பாடலைத் தேர்வு செய்து பாடினார். பவித்ராவின் இந்த உணர்வுப்பூர்வமானப் பாடலைக் கேட்ட நடுவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். நடுவர் சரண் பேசும்போது, "பவித்ராவின் பாடலில் எந்த இடத்திலும் சைந்தவியின் சாயல் தெரியவே இல்லை. இது முழுக்க முழுக்கப் பவித்ராவின் ஸ்டைலில் தான் இருந்தது. இந்தப் பாடல் அவ்வளவு அருமையாக இருக்கிறது" என்று நெகிழ்வுடன் பாராட்டினார்.
கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன சைந்தவி
பவித்ராவின் இந்த உணர்ச்சிப் போராட்டம் நிறைந்தப் பாடல், அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. இந்தப் பாடலைக் கூட தன்னுடைய கணவருக்காக தான் பாடியதாகவும் இந்த பாடல் பாடும் போது தன்னுடைய கணவர் தன் பக்கத்திலேயே இருப்பது போல தான் உணர்ந்ததாகவும் பவித்ரா சொல்லி இருந்தார். இந்தப் பாடலைப் பாடிப் பிரபலமான பாடகி சைந்தவி, நடுவர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து, கைகளைத் தட்டிப் பவித்ராவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர், அவர் மேடைக்கு வந்து, துயரத்தில் இருந்தப் பவித்ராவைக் கட்டி அணைத்து ஆறுதல் சொன்னார்.
சைந்தவி தொடர்ந்து பேசும்போது, கண்ணீருடன் இருந்த பவித்ராவிடம், "உங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நீங்கள் எந்த இடத்திலும் நினைக்கவே கூடாது. உங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் (ஃபான்ஸ்) இருக்கிறார்கள். இந்த மேடையில் தான் உங்களுடைய வாழ்க்கை தொடங்கி இருக்கிறது" என்று நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவருக்கு ஆறுதல் சொல்லிப் பேசினார்.
கனவு பாடல்
பிறகு, சைந்தவி, பவித்ராவோடு சேர்ந்து அந்தப் பாடலை மீண்டும் ஒருமுறைப் பாடினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் ப்ரோமோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவரின் இழப்பால் உடைந்துபோனப் பவித்ராவுக்கு, சரிகமபா மேடை ஒரு புதிய நம்பிக்கையையும், இலட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவையும் கொடுத்திருக்கிறது. பவித்ரா இந்த வாரம் மூன்றாவது இறுதிப் போட்டியாளராகத் தேர்வு ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எது எப்படியிருந்தாலும், இசைக்கு மரணமில்லை. தனதுக் கணவரின் ஆசையை நிறைவேற்றும் இந்தப் பயணத்தில், பவித்ரா வெற்றிப் பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications