சரிகமப டைட்டிலை ஜெயித்ததும் கில்மிஷா செய்த செயல்.. நெகிழ வைத்து விட்டாரே..! உருகும் மக்கள்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் ஜேம்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஈழத்து குயிலான கில்மிஷா டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார்.
இதனை பாராட்டி பல ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக கில்மிஷாவிற்க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கில்மிஷா தான் வெற்றி பெற்றதும் தனக்கு வாக்கு அளித்த மக்களுக்கு நன்றி கூறி தன்னுடைய சொந்த ஊர் பற்றி நெகிழ்வான போஸ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான சரிகமப நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கு நடந்து வருகிறது. அதில் சமீபத்தில் தான் சீனியர்களுக்கான சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்து. அதை தொடர்ந்து 28 போட்டியாளர்களோடு சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் இறுதி கட்டத்தில் ரிஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ், ரிஷாந்த் கவின் மற்றும் கனிஷ்கர் என ஆறு பேர் ஃபைனலுக்கு தேர்வாகி இருந்தனர். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றார். இவருடைய இயற்கையான குரல் வளத்தை கேட்டு மெய் மறக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம்.
அவருடைய பாடும் திறமை பலராலும் வியக்கப்பட்டு வருகிறது. இந்த மேடையில் தன்னுடைய தாய் மாமா மற்றும் தங்கள் நாட்டில் போரில் இறந்தவர்களை பற்றி பேசி பலரையும் ஆரம்பத்திலேயே கில்மிஷா கண்கலங்க வைத்திருந்தார். மட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து அசாணியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

அசானியால் முதல் வாரத்தில் நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் இருந்த நிலையில் பிறகு பல போராட்டங்களுக்கு மத்தியில் சில வாரங்கள் கழித்து பலருடைய முயற்சியால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அசானிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று நினைத்திருந்த ஜீ தமிழ் பிறகு மக்களின் ஆதரவால் தொடர்ச்சியாக அசானிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தனர்.
ஆனால் பைனலுக்கு அசானி தேர்வாகவில்லை என்பது பலருக்கு வருத்தம் தான். ஆனால் நேற்று கில்மிஷா டைட்டில் வெற்றி பெற்றதும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இலங்கை மக்களும் அதிகமாக சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் கில்மிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் மண்ணுக்கு சமர்பிப்பதோடு ஈழத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளார்.

அதாவது அவருடைய பதிவில் "எம் மண்ணுக்கும் மண்ணுக்கு உயிர் துறத்த என் மறவர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்... எனக்கு இத்தனை அன்பும் ஆதரவும் தந்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிள்ளையாய் என்றும் நான்.. என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதில் கில்மிஷாவின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். அதுபோல கில்மிஷாவின் வெற்றியை தங்கள் வீட்டு பிள்ளைகளின் வெற்றிகள் போல இலங்கை மக்கள் மட்டும் இன்றி உலகத்தில் இருக்கும் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications