சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? அதுவும் பரிசுகள் இவ்வளவா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் நிகழ்ச்சி இப்போது லைவாக ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே இந்த சீசனின் டைட்டில் வின்னராக கில்மிஷா தேர்வாகி இருக்கிறார்
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இன் வின்னரான கில்மிஷாவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் பாடல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதனாலே சரிகமப நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் குழந்தைகளுக்கான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று பைனல் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் வைத்து லைவாக ஒளிபரப்பாகியது.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து ஜூனியருக்கான நிகழ்ச்சி ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் சில போட்டியாளர்கள் வெளியேறி கடைசியாக ஃபைனலிஸ்ட் ஆக ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ்குமார், கனிஷ்கர், கவின் என ஆறு பேர் இறுதி நிகழ்ச்சிக்கு தேர்வாகி இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற கிராண்ட் பைனலில் இறுதி முடிவு வெளியாகி இருக்கிறது. அதன்படி சரிகமப லிட்டில் சாம்பியன் சீசன் 3 டைட்டில் வின்னராக ஈழத்துக்குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவரை தொடர்ந்து ரன்னராக ருத்தேஷ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
கில்மிஷிவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் அரங்கத்தில் அதிகமானோர் ஆரவாரம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து கில்மிஷா மற்றும் அசானி இருவரும் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதி கட்டத்தில் அசானி நுழையவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது.

அதோடு அசானியை டிஆர்பிக்காக பயன்படுத்திக் கொண்டார்களா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அசானி பைனலில் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் கில்மிஷா டைட்டிலை ஜெய்த்து இருப்பது ஆறுதலை தந்திருக்கிறது என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள். அதோடு டைட்டில் ஜெயித்த கில்மிஷாவிற்கு 10 லட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications