அங்கே இடி முழங்குது.. கருப்பசாமி பாடலை பாடிய போட்டியாளர்.. அரங்கத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம்
சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் மண் வாசனை ரவுண்ட் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் பக்தி பாடல்களுக்கான ரவுண்டு நடைபெறுகிறது. அப்போது ஒரு போட்டியாளர் அங்கே இடி முழங்குது என்ற கருப்பசாமி பாடலை பாட ஆரம்பித்திருந்ததும் ஒருவருக்கு அருள் வந்து சாமி ஆடி இருக்கிறார். அது குறித்த பிரமோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தான் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வருகிறது. அதுபோல ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில் சரிகமப சீனியர்களுக்கான சீசன் 4 நிகழ்ச்சி இப்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் மண்வாசனை ரவுண்ட் நடைபெற்றது. அதற்கு முன்பு டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்றது. அதில் பல அழுகாட்சி காட்சிகள் அலைமோத அதைப் பார்த்த ரசிகர்களும் கண்கலங்கி அழுதிருந்தனர்.
அதில் போட்டியாளர்களில் உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான அனுபவங்களை பலர் பகிர்ந்திருந்தனர். அதைத்தொடர்ந்து மண்வாசனை ரவுண்டில் பல போட்டியாளர்கள் ஜோடியாக சேர்ந்து பாட்டு பாடி ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் பக்தி பாடல்களுக்கு பெயர் போன பாடகர்களின் முன்னிலையில் பக்தி ரவுண்ட் நடைபெற இருக்கிறது.
அதில் ஒரு பக்கம் கடவுள் வேடத்தில் பிரமிக்க வைக்கும் கெட்டப்புகளில் சிலர் பெர்பார்மன்ஸ் செய்து கொண்டிருக்கும் போது போட்டியாளர்களும் தங்களுடைய பாடல் திறமைகளை வெளிக்காட்டுகிறார்கள். அதில் ஒரு பெண் "அங்கே இடி முழங்குது" என்ற பாடலை பாட அதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் திடீரென அருள் வந்து சாமியாடுகிறார்.
அதை பார்த்து சிறப்பு விருந்தினர் உங்களால் ஒருவரை பாட்டு பாடி சாமியாட வைக்க முடிகிறது என்றால் இந்த இடத்தில் தெய்வீக அருள் நிறைந்திருக்கிறது. தெய்வமே உங்களை ஆசீர்வதிக்கிறது என்று அர்த்தம் என்று பேசி இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications