சர்ப்ரைஸ்களை அள்ளி கொடுக்க வரும் சரிகமப சங்கமம் ரவுண்ட் - வெளியேற போவது யார்?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெற்றது. சரிகமப மேடையில் சாமி வந்து ஆடும் அளவிற்கு இந்த ரவுண்ட் பரவசம் நிறைந்ததாக நடந்து முடிந்தது.

அதாவது பக்தி பாடல்களை பாடி பெரிய அளவில் பாப்புலரான வீரமணி ராஜு, மஹாலிங்கம் மற்றும் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். முகேஷ், சரத், ஸ்வேதா, விஜய் லோஷன், சரண், இந்திரஜித் ஆகியோர் கோல்டன் ஷவரை தட்டி செல்ல ஜெய பார்கவி, மகிழன் மற்றும் அமன் ஆகியோர் பிளாட்டினம் பெர்பாமன்ஸ் ஷவரை பெற்றுள்ளனர்.
ரியல் பெருமாள் சிலை, அம்மன் கெட்டப், அய்யப்பன் கெட்டப் என பிரம்மிக்க வைக்கும் வேடங்களில் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தனர். பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் சரிகமப நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் சீசன் பெரிய அளவில் ரசிகர்களை உணர்வு பூர்வமாக பரவச நிலை அடைய வைக்கும். மதத்தை தாண்டி சில பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்து விடும். அந்த மாதிரி பாடல்களை உணர்வு பூர்வமாக போட்டியாளர்கள் பாடி இருக்கும் நிலையில் பலர் பாடலை கேட்டு மெய் மறந்து போயிருக்கின்றனர்.

கடந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த வாரம் சரிகமப சங்கமம் என்ற சுற்று நடைபெற உள்ளது. அதாவது சரிகமப நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களில் பங்கேற்ற பைனலிஸ்ட் போட்டியாளர்கள் சீசன் 4 போட்டியாளர்களுடன் இணைந்து பாட உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த ரவுண்டில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி போட்டியாளரான புருஷோத்தமன் தான சொந்த உழைப்பால் தற்போது ஒரு மாடி வீடு கட்டி குடியேறியுள்ளனர்.

இது குறித்த காணொளியை இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர், மேலும் புருசோத்தமன் என்னுடைய அம்மா இப்போ தான் கால் வலி இல்லாமல் சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி பல சர்ப்ரைஸ்கள் நிறைந்த ரவுண்டாக இந்த சரிகமப சங்கமம் இருக்க போகிறது என தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த ரவுண்ட் முடிவில் எலிமினேஷன் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது, வெளியேற போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications