Sathya Serial: சத்யா மனம் உடைந்த தருணம்... அப்பாவின் சமாதி முன் அழும் சத்யா
சென்னை: ஜீ தமிழ் டிவியின் சத்யா சீரியல் ஒரு பெண்ணின் மனதை பார்க்காமல் அவளின் நடவடிக்கை மற்றும் உடையை பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்பதை கணிப்பதாக இருக்கிறது.
சத்யா தனது அப்பாவால் ஆண் பிள்ளை போன்ற கெட்டப்பில் வளர்க்கப்படுகிறாள். இவளும் அப்பா இறந்த பிறகும் அதே கெட்டப்பில் அப்பாவின் மெக்கானிக் பட்டறையை பார்த்துக்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறாள்.
உடன் பிறந்த சகோதரி செய்யும் தவறுகளை தான் செய்த தவறாக வீட்டில் அம்மாவிடம் ஏச்சு பேச்சுக்கள்... பேசாமல் இருப்பது என்று சத்யாவை பார்த்தாலே பாவமாகத்தான் இருக்கிறது.

கெட்டப் சத்யா
கிராப் வெட்டிய தலை.. பேண்ட் ஷர்ட் மட்டுமே எப்போதும் உடை. பசங்களிடம் மட்டுமே சகவாசம். என்று ஆண்பிள்ளை மாதிரி வளர்கிறாள். அவளை அப்பாவும் அப்படியே வளர்த்துவிட அவருக்குப் பிறகு குடும்பத்தை தாங்கும் தூணாக இருக்கிறாள் சத்யா.

பாபு பேபி
ஒரு திருடனைப் பார்த்து துரத்தும் போது பாபுவை பார்க்க நேர்கிறது.அன்று முதல் சத்யா அமுல் பேபி அமுல் பேபி என்று அவனையே சுற்றி வருகிறாள். அவனும் சும்மா பழக.. அவன் தன்னை காதலிப்பதாக கற்பனையை வளர்த்துக்கொண்டு ஆசையையும் வளர்த்துக் கொள்கிறாள்.

நோ காதல்
சத்யா நான் உன்னை காதலிக்கவில்லை என்று மறைமுகமாக.. நேர் முகமாக என்று சொல்லியும் சத்யா நம்பாமல் அவன் மீது அதீத நம்பிக்கை வைத்து, தனது நண்பர்களிடம் சொல்லி மகிழ்கிறாள். தாங்க முடியாத நேரத்தில் பாபுவின் தோழன் உங்களை அவன் காதலிக்கலைங்க என்று பட்டென்று சொல்ல உடைந்து போகிறாள் சத்யா.

சமாதி முன்
அப்பாவின் சமாதி முன் அமர்ந்து பாபு தன்னை காதலிக்கவில்லை என்கிற உண்மை, அவன் எதனால் தன்னை காதலிக்கலை என்று தெரிந்துக் கொண்ட உண்மை எல்லாத்தையும் சொல்லி அழுகிறாள். சென்னை பாஷையில், இனிமே இந்த கெட்டப்பை என்னால் எப்படிப்பா மாத்திக்க முடியும்.நீதானே என்னை இப்படி வளர்த்தேன்னு சொல்லி அழறா.
பெண்களுக்கு உடையும், கிராப் வெட்டிய தலையும் என்றாலும், பெண்மை மாறிவிடுமா என்ன?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications