இரண்டு எழுத்து நடிகையின் 2வது திருமணம்.. "பழைய பாதை"யான புதிய பாதை? குறுக்கே சவுந்தர்யா: பிரபலம் நச்
சென்னை: சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை யோசனைகளையும், தன்னுடைய கலைப்படைப்புகளையும், சீதாவிடம் தினமும் பகிர்ந்து கொள்வதையே வழக்கமாக வைத்திருந்தாராம் பார்த்திபன்.. இதுதான் சீதாவுக்கு பார்த்திபன் மீது மெல்ல மெல்ல காதல் வர காரணமாக இருந்தது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், சீதா எப்படி திரைத்துறைக்குள் நுழைந்தார், எப்படி பிரபல நடிகையாக வலம்வந்தார், அவரது குடும்ப வாழ்க்கை குறித்தெல்லாம் விரிவாகவே பேசியிருக்கிறார்.

"சீதாவின் அப்பா சினிமா ஆர்வமுடைய நபர்.. அவருக்கு மகளை, சாவித்ரி போல, பானுமதியை போல மிகப்பெரிய நடிகையாக கொண்டு வர வேண்டும் என்று ஆசை இருந்தது. அப்போதுதான், ஆண் பாவம் படத்துக்கு குடும்ப பாங்கான கதாநாயகியை டைரக்டர் பாண்டியராஜன் தேடிக் கொண்டிருந்தார்.
ஹீரோயின்: ஆனால், அவரது கற்பனைக்கேற்ற கதாநாயகி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஒரு திருமண வீட்டில் பாவாடை தாவணியுடன் ஓடியாடி வேலை பார்க்கும் சீதாவை கவனிக்கிறார். பாண்டியராஜுக்கு சீதாவை பிடித்துவிட்டது. இவர்தான் சரியான ஹீரோயின் என்பதை முடிவு செய்துகொண்டு, நேரடியாக சீதாவின் அப்பாவிடம் பேசுகிறார். அப்போதுதான், அப்பாவுக்கு ஏற்கனவே சினிமா ஆசை இருப்பது தெரியவந்தது.
ஆனால், தனக்கு சினிமா வேண்டாம் என்று மகள் மறுக்கிறார். எனினும் கட்டாயப்படுத்தி சீதாவை சினிமாவில் நடிக்க வைக்கிறார்.. 15 வயதில் ஆண் பாவம் படத்தில் ஒப்பந்தமானார். சொர்ணபுரி சைதன்யா என்பதுதான் சீதாவின் ஒரிஜினல் பெயர்.. இதனை மாற்றி சுருக்கமாக சீதா என்று பெயர் வைத்தார் பாண்டியராஜன்.
கிளாமர் ரோல்: பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பியில் சீதா நடித்தது, மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது.. பிறகு குரு சிஷ்யன் என்ற ரஜினி படத்தில் சீதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சற்று கிளாமராக இந்த படத்தில் நடித்திருந்தார்.
உடனே பாலச்சந்தர், விசு போன்றோர் உரிமையோடு சீதாவை திட்டுகிறார்கள். "குடும்ப பாங்காக நடிப்பதற்கு நீ ஒருத்திதான் இருக்கே.. நீ ஏன் கிளாமர் ரோல் செய்தாய்?" என்று சத்தம் போடுகிறார்கள். இதற்கு பிறகு எப்போதுமே குடும்ப பாங்கான நடிகையாகவே வலம் வந்தார். சீதாவின் படங்களுக்கு சீதாவே டப்பிங் தந்தார்.
டைரக்டர்: புதிய பாதை படம் தயாராகிறது.. படத்தை எடுப்பது புதுமுக டைரக்டர்.. புதுமுக ஹீரோ என்றதுமே, பார்த்திபனுடன் நடிக்க மாட்டேன் என்கிறார் சீதா. ஆனால், சீதாவின் அப்பா, நல்ல கதை, திறமையான டைக்டராக தெரிகிறார் என்று மகளை சமாதானம் செய்கிறார். இதனால் வேண்டா வெறுப்பாக நடிக்க ஒப்புக் கொண்டார்.
இறுதியில், புதிய பாதை தேசியவிருது பெறுகிறது. ரஜினி, கமல் போல ஒரு பெரிய நடிகனுக்கு தரக்கூடிய மரியாதையை, பார்த்திபனுக்கு சீதா தர்றாங்க.. உடனே பார்த்திபன், சினிமா வட்டாரங்கள் முழுவதும், சீதாவின் புகழ் பாடுகிறார்..
பழைய பாதை: புதிய பாதை படத்துக்கு பிறகு குணச்சித்திர நடிகையாகவும் சீதா மாறினார்... இந்த நேரத்தில்தான், சீதாவை பார்த்திபன் விரும்புவதாக சீதாவுக்கு தகவல் போகிறது. ஆனால் பார்த்திபனின் காதலை சீதா ஏற்கவில்லை.. தினமும் காலையில் அரை மணி நேரம் சீதாவுக்கு போன் செய்து, "உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன். என்னால வேற வேலையே பார்க்க முடியவில்லை. உங்களுடன் வாழ்வதே என்னுடைய ஜென்மவிருத்தி" என்றெல்லாம் கன்வீன்ஸ் செய்வாராம்.
அத்துடன், சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை யோசனைகளையும், தன்னுடைய கலைப்படைப்புகளையும், சீதாவிடம் தினமும் பகிர்ந்து கொள்வதையே வழக்கமாக வைத்திருந்தார்.. இதுதான் சீதாவுக்கு பார்த்திபன் மீது மெல்ல மெல்ல காதல் வர காரணமானது. உடனே இந்த விஷயம் தெரிந்து சீதாவின் அப்பா எதிர்க்கிறார். அடி, உதை வாங்கி, இறுதியில் வீட்டுக்கு தெரியாமல் பார்த்திபனை ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார் சீதா.
சவுந்தர்யா: ஒரு பெண் குழந்தையும் பிறக்குது.. ஆனால், பார்த்திபனின் வழி மாறுகிறது.. புதிய பாதை பழைய பாதையாக மாறுகிறது.. நடிகை சவுந்தர்யாவை லவ் செய்வதாக சீதாவுக்கு தகவல் போகிறது.. இதனால் மனம் உடைந்து போனார் சீதா..
பார்த்திபனுக்காக திரைப்பட வாழ்க்கையையே தூக்கி போட்டும்கூட, பார்த்திபன் மாறவில்லை. பார்த்திபன் பல பெண்களிடம் சபலமாக இருப்பதாக கேள்விபட்டு, உடைந்து போய்விட்டார்.. இதனால் விவாகரத்து முடிவுக்கு வந்தார். பிறகுதான் அம்மா, அக்கா வேடங்களில் திரைப்படங்களில், சீரியல்களில் நடிக்க துவங்கினார்.. 2010-ல் சீரியல் நடிகர் சதீஷ் என்பரை திருமணம் செய்து, 6 வருடத்தில் அதுவும் டைவர்ஸ் ஆகிவிட்டது" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications