திடீரென தலைமுடியை எடுத்து மொட்டை தலையுடன் வீடியோ வெளியிட்ட சீதா.. இப்படி ஒரு காரணமா? வியப்பில் ரசிகர்கள்
சென்னை: பிரபல நடிகை சீதா, சமீபத்தில் தனது தலைமுடியை மொட்டை அடித்து, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். தனது தாயார் இறந்த பிறகு, அவர் செய்த இந்த செயல், இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் தங்கள் அழகு மற்றும் தலைமுடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், தலைமுடி இல்லாமல் இருக்கும் தனது தோற்றத்தையும் ஒரு அழகாக வெளிப்படுத்திய சீதாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சீதாவின் சினிமா பயணம்
நடிகை சீதா, 1985-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'ஆண் பாவம்'திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பார்த்திபனுடன் புதிய பாதை உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சீதா தன்னுடைய நடிப்பிற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
காதல், திருமணம், விவாகரத்து
நடிகை சீதா, 80-களில் பிரபல நடிகராக இருந்த பார்த்திபனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபினயா, கீர்த்தனா, ராக்கி என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் திருமணம் சில வருடங்கள் கழித்து விவாகரத்தில் முடிவடைந்தது. பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்தாலும், குழந்தைகளுக்காக இருவரும் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனர்.
அம்மாவிற்கான தியாகம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சீதா, "என் அம்மா தான் எனக்கு எல்லாமே. அவர் ஒரு தைரியமான பெண்," என்று கூறியிருந்தார். எனக்கு இந்த உலகத்தில் பெரிதாக எதுவுமே தெரியாது. என்னுடைய அம்மா தான் என்னை அப்போது இருந்து இப்ப வரைக்கும் ஷூட்டிங் கூட்டிட்டு போவார். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் காலமாகி இருக்கிறார் என்று சீதா பேசியிருந்தார். தனது தாயாரின் மறைவுக்குப் பிறகு, அவர் செய்த இந்த செயல், அவரது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. தலைமுடி இல்லாமல் இருக்கும் தனது தோற்றத்தையும் பெருமையுடன் சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்ததைக் கண்ட ரசிகர்கள், அவரது துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.
இந்தச் செய்தி, ஒரு நடிகையின் தோற்றத்தைவிட, அவரது குணம் மற்றும் உணர்வுகளே முக்கியம் என்பதை உணர்த்துகிறது. நடிகை சீதா திரைப்படங்கள் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது பார்த்திபனை காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். சில வருடங்களில் விவாகரத்து ஆனதும் மீண்டும் நடிக்க தொடங்கி இருந்தார். அதற்குப் பிறகு சீரியல் மற்றும் சினிமா என்று நடித்துக் கொண்டிருந்த சீதாவிற்கு சீரியல் நடிகர் ஒருவருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்து விட்டது என்று கூறப்படுகிறது.
இயற்கை விவசாயம்
இந்த நிலையில் இப்போது மீண்டும் சினிமாக்களில் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கும் சீதா தன்னுடைய சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சீதா youtube சேனலில் தான் செய்யும் சமையல் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
அப்படித்தான் இன்று தன்னுடைய யூடியூப் வீடியோவில் அவர் பகிர்ந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சீதாவிற்கு சுருள் சுருளாக தலைமுடி நீண்டு இருக்கும் ஆனால் இப்போது அவர் தலையை மொட்டை அடித்து இருக்கிறார். அதற்காக என்ன காரணம் என்று அவர் சொல்லவில்லை என்றாலும் அவருடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் சோகமாக இருந்ததால் தான் இவர் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications