நடிகர் விஜய்க்காக இவ்வளவு சதி செய்தாரா எஸ்.ஏ.சி? போட்டு உடைத்த பிரபலம்.. ஆனால் இதை கவனிச்சீங்களா?
சென்னை: தளபதி 68 படத்தில் நடிகர் மாதவன் நடிப்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என்றும், வெங்கட் பிரபுவிற்கு இது ஒரு சவாலான படம் என்றும் கூறியுள்ள பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, அந்த மாதவனின் சினிமா கேரியரை அழிக்க தளபதி விஜய் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி எடுத்த முயற்சிகள் என சிலவற்றை பற்றி கூறி அதிரவைத்துள்ளார்.
இயக்குனர் எஸ்.ஏ.சி பற்றி இவர் கூறியுள்ள வீடியோ பல்வேறு வகையான சர்ச்சை கமண்ட்டுகளை பெற்று சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மாதவனை பற்றி கூறியுள்ள செய்யாறு பாலு, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்கு தற்பொழுது மாதவன் கமிட் ஆகி இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பே லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த வேட்டை படத்தில் விஜய், மாதவன் இணைந்து நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அந்த படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் வேலாயுதம் படத்தில் முழு கவனத்துடன் இருந்ததால் வேட்டை படத்திற்கு விஜய்யால் சரியான தேதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. அதனால் வேட்டை படத்தில் விஜய் நடிக்க முடியாமல் ஆர்யா நடிக்க நேர்ந்தது எனக் கூறியுள்ளார்.இப்பொழுது பாலிவுட்டில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட் சினிமாவால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக மாதவன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு காலத்தில் தன் மகன் விஜய்க்கு போட்டியாக வந்து விடுவார் என்று இயக்குனர் எஸ்.ஏ .சி ஆல் வீழ்த்துவதற்கு சதி செய்யப்பட்ட மாதவன் அந்த நேரத்தில் தன் முடிவில் உறுதியாக இருந்ததால்தான் தற்பொழுது சிறந்த நடிகராக அவரால் தொடர முடிகிறது என்றும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரால் விஜய்க்காக வீழ்த்தப்பட்ட நடிகர்கள் சிலர் என்று ஒரு பட்டியலையும் வாசித்துள்ளார்.

ஆரம்பத்தில் தனது மகனை கதாநாயகனாக நிலை நிறுத்த முயற்சி செய்து வந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் விஜய் ஒரு நிலையான கதாநாயகனாக சினிமாவில் உருவான பின்பு விஜய்க்கு போட்டியாக வருவார்கள் என நினைக்கும் வளர்ந்து வரும் கதாநாயகர்களை ஆரம்பத்திலேயே அவர்களை வைத்து படம் எடுப்பதாக கூறி அவர்களது சினிமா கேரியரை காலி செய்வது எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு வேலையாக செய்து வந்துள்ளார் என்றும், அதற்கு உதாரணமாக நரேனை வைத்து இயக்கிய நெஞ்சிருக்கும் வரை,ரவி கிருஷ்ணாவை வைத்து இயக்கிய சுக்கிரன், ஜெய் வைத்து இயக்கிய கேப்மாரி போன்ற படங்களை கூறியுள்ளார்.
இந்த படங்கள் எல்லாம் விஜய்க்கு போட்டியாக இந்த நடிகர்கள் வளர்ந்து விடுவார்கள் என்று இயக்குனர் எஸ்.ஏ.சி ஆல் கணிக்கப்பட்டு அந்த கதாநாயகர்களின் சினிமா வாழ்க்கையை அழிக்கும் பொருட்டு இயக்குனர் எஸ் ஏ சி ஆல் திட்டமிட்டு எடுக்கப்பட்ட தோல்வி படம் என்று கூறியுள்ளார். அலைபாயுதே, மின்னலே,ரன் என்று வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கிரேஸை உருவாக்கி வைத்திருந்த மாதவன் தனது மகன் விஜய்க்கு போட்டியாக வளர்ந்து வந்து விடுவார் என நினைத்து மாதவனிடம் சென்று சில கதைகளை கூறியிருக்கிறார்.
எஸ் ஏ சந்திரசேகரன்.எஸ்.ஏ.சி கூறிய கதைகளில் விருப்பம் இல்லாத மாதவன் விஜய்யின் அப்பா என்ற காரணத்தால் ஒரு கதையை முதலில் வேண்டா வெறுப்பாக ஓகே செய்துள்ளார். ஆனால் அந்தக் கதை குறித்து தனது மேலாளரிடம் பேசிய போது இந்த கதையை கேட்ட அவரது மேலாளர் இந்த கதையில் நீங்கள் நடித்தால் உறுதியாக சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விடுவீர்கள் என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் எஸ்.ஏ.சி யின் சதிகளை பற்றியும் கூறியுள்ளார் .அதனால் தான் மாதவன் எஸ்.ஏ.சி படத்தில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எனக் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
செய்யாறு பாலுவின் இந்த வீடியோவை பார்த்த பலர் சமீப காலமாக ரஜினிகாந்துக்கு சப்போர்ட் செய்வதற்காக விஜய்யை தாக்கி பேசி வரும் செய்யாறு பாலு, இப்பொழுது விஜய்யின் தந்தை மீது பாய்ந்திருக்கிறார் என்றும்,இவர் எஸ் ஏ சி ஆல் அழிக்கப்பட்டவர்கள் என்று பட்டியல் வாசிக்கும் நடிகர்களுக்கும் விஜய் பெரிய நடிகராக உயர்த்த காலத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும், இன்னும் கொஞ்சம் விட்டால் ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்கள் எல்லாம் விஜய் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் என்று எஸ் ஏ சி ஆல் காலி செய்யப்பட்டவர்கள் என உருட்டுவார் போல என்று கிண்டல் செய்தும் வருகின்றனர்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications