Sembaruthi Serial: ஆதி தோளில் பார்வதி.. கைகளை வைத்து முதுகில் படர்ந்து.. ஆஹா!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பு அற்புதம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். அதுதான் சீரியல் ரசிகர்களை இன்றுவரை அந்த சீரியல் முன் கட்டிப் போட்டு உள்ளது.
வீட்டில் சிவ லிங்கத்துக்கு ஜோடி ஜோடியாக பாலாபிஷேகம் செய்து, பின்னர் சந்திர தரிசனம் பார்த்துவிட்டு, கணவன்மார்கள் தங்களது மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட வேண்டுமாம்.
சுவாமிஜி சொல்ல, அகிலாண்டேஸ்வரி ஆதி நீ மித்ரா நெத்தியில் குங்குமம் வைக்கணும்னு சொல்றாங்க. ஆதிக்கு மித்ரான்னு முடிவு செய்து இருக்காங்க அகிலாம்மா. மித்ராவுக்கு சந்தோசம். பார்வதிக்கு வருத்தம்!

ஆதியின் அருகில்
ஆதியின் அருகில் நின்று பார்வதி ஒரு மனைவியாக மகிழ்வுடன் சிவ லிங்கத்தை கும்பிட்டுமாச்சு. அதற்கு முன்னர் இருவரும் ஜோடியாக சிவ லிங்கத்துக்கு பாலாபிஷேகமும் செய்தாச்சு.அந்த நேரம் பார்த்து சுவாமிஜி சாம்பிராணி புகையை அதிகமாகப் போட்டுவிட அகிலாண்டேஸ்வரி அம்மா கண்ணை கசக்கிக் கொண்டு இருந்த வேளையில்,இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் பாலாபிஷேகம் செய்தாச்சு.

ஜோடியாக சந்திர தரிசனம்
எப்படியோ மாமாவுடன் சேர்ந்து சிவ லிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்தாச்சு. சந்திர தரிசனம் செய்து மித்ராவுக்கு குங்குமம் வைக்கணும்னு அகிலாம்மா சொல்லி இருக்காங்க.இப்போ மாமா என் நெத்தியில எப்படி குங்குமம் வைப்பாருன்னு பார்வதி யோசிச்சுகிட்டே மனசு நொந்து மாடிக்கு வந்து நிக்கறா.

பார்வதி மித்ரா
பார்வதி பின்னாடியே வந்த மித்ரா...என்னடி பார்வதி.. இப்போ பார்த்தியா ஆதி என் நெத்தியிலதான் குங்குமம் வைக்கப் போறார். எப்படியோ புகையை அதிகமா போட்டு பாலாபிஷேகம் ஆதியோட சேர்ந்து பண்ணிட்டே.. இதை அகிலா அத்தைகிட்டே சொன்னா என்னாகும் தெரியுமா என்று சீண்டிவிட.. போய் சொல்லிக்கோ போடீ..நீ என்னதான் கனவு கண்டாலும் பெரிய ஐயா உன் நெத்தியில குங்குமம் வைக்கமாட்டார்னு பார்வதி சொல்றா. என் நெத்தியில் வைக்காம உன் நெத்தியிலா வைப்பாரான்னு மித்ரா கோபமாக கேட்க..ஆமாண்டி என் நெத்தியிலதான் வைப்பார்னு பார்வதி சொல்றா.

அங்கு வந்த ஆதி
மாடிக்கு ஏறி வந்த ஆதி என்னபார்வதி இங்கே இவ கூட பேசிகிட்டு இருக்கே... எதாவது பிரச்சனையான்னு கேட்கிறான்.இல்லை பெரிய ஐயா சும்மாத்தான் பேசிகிட்டு இருந்தோம்னு பார்வதி சொல்ல, வேண்டாதவங்க கிட்ட நமக்கு என்ன பேச்சுன்னு சொல்லி அவளை தோளில் கைப் போட்டு அழைச்சுட்டு போறான் ரூமுக்குள்ளே போய் கதவை சாத்திக்க.மித்ரா அதிர்ந்து போயி நிற்கிறாள்.

பார்வதி ரொமான்ஸ்
அங்கு ஜன்னல் திரையை விலக்கி..நம்ம ரெண்டு பேரும் மாடியில போயி சந்திர தரிசனம் பார்க்க முடியாது, இங்கிருந்தே பார்க்கலாம் பார்வதின்னு அவன் வெளியில் பார்க்க.. ரொமான்ஸ் மூடுக்கு வந்த பார்வதி மெல்ல ஆதியின் அருகில் சென்று தனது இரு கைகளையும் அவன் தோளில் வைத்து,அவன் முதுகில் சாய்ந்துக்கொண்டு அவனைப் பார்க்கிறாள். இவனும் அவளை நோக்குகிறான்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications