திருமண நாளிலே கர்ப்பத்தை அறிவித்த செம்பருத்தி சீரியல் நடிகை.. இத்தனை நாளாக மறைத்து வைத்த ரகசியம்!
செம்பருத்தி சீரியல் வில்லியாக நடித்த நடிகை திருமண நாளில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: செம்பருத்தி சீரியல் மித்ரா கேரக்டரில் வில்லியாக நடித்த நடிகை பாரத நாயுடு தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய திருமண நாளிலே இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து கொண்டதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் பாரத நாயுடு கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.

செம்பருத்தி வில்லி
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த பாரத நாயுடு அந்த சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறி பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியலில் கோகிலாவாக நடித்திருந்தார். ஜீ தமிழில் இவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இவர் வில்லி கெல்லாம் வில்லியா என்று கலாய்த்து கொண்டிருந்தனர். வில்லியாக அகிலாண்டேஸ்வரியை பழிவாங்க செய்த பிளான்கள் எல்லாம் சொதப்பும் போது அதிகமான ரசிகர்கள் இவரை திட்டி தீர்ந்து வந்தனர். முதல் சீரியலில் இவருக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் நெகட்டிவர்ஸ் அதிகரித்து விட்டனர்.

கதாநாயகியாக அறிமுகம்
ஹைதராபாத்தை சொந்த ஊராக கொண்ட இவர் அங்கேதான் பள்ளி கல்லூரியை படித்திருக்கிறார். பிறகு மாடல்ங்கில் கலக்கி இருக்கிறார். பிறகு முதல் முறையாக தேன்மிட்டாய் என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா இயக்கத்தில் வெளியான அட்ரா மச்சான் விசிலு என்ற திரைப்படத்திலும் இவர் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து 2017ல் வெளியான நிரஞ்சனா என்கிற திகில் படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சீரியலில் அறிமுகம்
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் சைட் ரோலிலும் கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பாப்புலர் கிடைக்கவில்லை என்பதாலே இவர் சின்ன திரையை நோக்கி அடியெடுத்து இருக்கிறார். முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, அதைத்தொடர்ந்து தேவதை கண்டேன் என்கிற சீரியலிலும் பிறகு செம்பருத்தி சீரியலில் மித்ராவாகவும் இவர் நடித்திருக்கிறார்.

மகிழ்ச்சியான செய்தி தான்
இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இளைஞர்களையும் தன்னுடைய ரசிகர்களாக பாலோ பண்ண வைத்திருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களாகவே இவருடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதுவும் தன்னுடைய திருமண நாளில் இவர் தன்னுடைய கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications