பல நாள் கனவு நினைவாகி விட்டது.. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி
நடிகை ஊர்வம்பு லட்சுமி சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கி வாங்கி இருக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலமாக லட்சுமி வனஜா கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
சீரியல் நடிகை லட்சுமி முதன்முதலாக ஊர்வம்பு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானதால் அவருடைய பெயர் ஊர் வம்பு லட்சுமி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் லட்சுமி தற்போது முதல் முறையாக சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் அதை தன்னுடைய youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

செம்பருத்தி வனஜா
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் யாரும் மறந்து விட முடியாது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர். இந்த சீரியலில் கதாநாயகன் மாற்றத்தால் கடைசி நேரத்தில் பல திருப்பங்கள் நடைபெற்றது. ஆனாலும் இந்த சீரியலில் வனஜாவை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அந்த அளவிற்கு வில்லிக்கும் மக்களின் மத்தியில் ஆதரவு இருந்தது என்று சொன்னால் அது லட்சுமிக்கு தான். இந்த சீரியலில் பல விருதுகளையும் அவர் பெற்றிருந்தார்.

ஊர் வம்பு லட்சுமி
நடிகை லட்சுமி முதல்முறையாக ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஊர் வம்பு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகினார். அதுவே தற்போது வரைக்கும் அவருடைய அடையாளமாக ஆகிப்போனது. ஆனாலும் செம்பருத்தி சீரியலுக்கு பிறகு அவர் வனஜா என்று அதிகமாக அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது கூட அவரை வனஜா என்று சொன்னால் பலருக்கும் தெரிந்து விடும். நடிகை லட்சுமிக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது ஆரம்பத்தில் என்றால் சன் டிவியில் அகல்யா என்ற சீரியல் தான். இந்த சீரியலுக்கு பிறகு வம்சம் என்ற சீரியலில் இவர் நடித்து வந்தார்.

மகனோடு பிரபலம்
அதிகமாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வரும் லட்சுமி செம்பருத்தி சீரியலுக்கு பிறகு மீண்டும் அதே ஜீ தமிழில் பேரன்பு என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். குறிப்பாக இவருடைய மகனோடு இவர் பல வீடியோக்களை வெளியிட்டு வருவார். அவருடைய மகனுடன் சேர்ந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தான் அடிக்கடி செய்யும் சேட்டைகள் மற்றும் செல்லும் இடங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய youtube பக்கத்தில் அவர் பகிர்ந்து வருவது வழக்கம்.

புது வீடு வாங்கியாச்சி
இந்த நிலையில் தற்போது அவர் திருமழிசை பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில் புது வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அதை தன்னுடைய youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பல வசதிகளிலும் கூடிய அந்த வீட்டை சுத்தி காண்பித்தும் இருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமான லைக்கள் குவிந்து வருகிறது. என்னதான் வில்லியாக அதிகமாக திட்டு வாங்கிக் கொண்டு இருந்தாலும் இவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று இவருக்கு பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications