Sembaruthi Serial: அச்சச்சோ.. ஆதிக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சு போச்சே!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட். பெரும் தொழிலதிபர் அகிலாண்டேஸ்வரி..இவரது விசுவாசமான டிரைவர் சுந்தரம்
சுந்தரத்தின் மகள் பார்வதி, அகிலாண்டேஸ்வரி அம்மாவின் மூத்த மகன் ஆதி. ஆதி, வீட்டுக்கு வேலைக்காரியாக வந்த பார்வதியை காதலிக்கிறான் அது ஒரு வருடம் போச்சு.
பிறகு கோயிலில் யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செய்துகிட்டான் இது நடந்தும் ஒரு வருஷம் ஆகிப் போச்சு.

பார்வதி அகிலாண்டேஸ்வரி
பார்வதியை அகிலாண்டேஸ்வரிக்கு ரொம்ப பிடிக்கும்.அவளை சமையலறை முதல் பூஜை அறை வரை அகிலாண்டேஸ்வரி அம்மா அனுமதித்தாலும், பார்வதி ரொம்ப நல்ல பொண்ணு .இவ்ளோதான் அவங்க அபிப்ராயம். மத்தபடி குடும்பத்தின் கவுரவம், பாரம்பரியம், சென்டிமென்ட் இவைகளை ரொம்ப கடைப்பிடிப்பவங்க அகிலாண்டேஸ்வரி.

சுந்தரம் அகிலாண்டேஸ்வரி
அகிலாண்டேஸ்வரிக்கு காலம் காலமாக அதாவது 25 வருடங்களுக்கும் மேலாக கார் ஓட்டி வருபவர் சுந்தரம்.ரொம்ப ரொம்ப விசுவாசி. இவருக்கு பார்வதியும், ஆதியும் பழகுவது தெரிந்ததும், எப்படி நீ அகிலாண்டேஸ்வரி அம்மாவை ஏமாத்தலாம் என்றும் பெண்ணிடம் கூட பேசாமல் இருப்பவர். அக்காவுக்கு உடந்தையாக இருக்கிறான் என்று சிறுவனான பிள்ளையிடமும் பேசாமல் இருப்பவர்.

நல்லவங்க அகிலாண்டேஸ்வரி
அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிக்கும் பிரியா ராமனுக்கு நல்ல கதாபாத்திரம். குடும்பத்தை கட்டிக் காக்கணும், அதே சமயம் தொழிலும் நம்பர் ஒன்னாக இருக்க போராடும் ஒரு பெண் கதாபாத்திரம்.அதனாலதான் எல்லாருக்கும் பார்வதியை பிடித்த அளவுக்கு அகிலாண்டேஸ்வரி அம்மாவையும் பிடித்துப் போகிறது.

பொய் புருஷன்
என்னை சுத்தி என்னென்னவோ நடக்குது..ஆனல், உங்களுக்குத் தெரியலைன்னு அந்த நந்தினி என்னை நக்கல் பண்றாங்க. அதுதான் எனக்கு கவலையா இருக்கு. நீங்க எனக்கு எதுவும் தெரியாமல் எதுவும் மறைக்கிறீங்களான்னு புருஷனிடம் கேட்கறாங்க.நான் எப்படி அகிலா அதை செய்வேன்னு பொய் சொல்றார்.

தாலி பார்வதி
என்ன சொன்னாலும் பெரிய தம்பியிடம் பழகுவதை பார்வதி நிறுத்த மாட்டேங்கிறாளே. எதுவோ நடந்து இருக்கு, அதை கண்டு பிடிச்சு அம்மாவிடம் சொல்லனும் என்று புறப்படுகிறார் சுந்தரம். கோயிலுக்கு போயிருக்கும் பார்வதியை பின் தொடர... அதற்குள் யாரோ ஒரு பெண்ணின் தாலியை திருடன் பறிக்க முயலுகிறான்.

தாலி பத்திரம்தானே
அவனை சுந்தரம் அடித்து உதைத்து அனுப்பிவிட்டு, ஏம்மா உன் தாலி பத்திரம்தானேன்னு இவர் கேட்கிறார். தனது மகள்தான் அங்கு நிற்கிறாள் என்று தெரியாமலே. கடைசியில் பார்த்தால் நிற்பது தனது மகள், அவளது கழுத்தில் தாலி.

தாலி கட்டியது யாரு
இந்த தாலியை பெரிய தம்பி உன் கழுத்தில் கட்டுச்சான்னு அதிர்ச்சியாகக் கேட்கிறார். ஆமாம்ப்பான்னு பார்வதி சொல்ல, இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லாமல் விட மாட்டேன்னு போகிறார் தந்தை.அவர் போய் சொல்வாரா,இல்லை அதற்குள் அவருக்கு என்னாகுமோ ஏதாகுமோ என்கிற பயம் பார்ப்பவர்களுக்கு வந்திருக்கு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications