குழந்தையை இனி காமினு கேட்க மாட்டேன்.. திவ்யாவை மன்னிக்க தயார்.. ஆனால் ஒன்று.. நடிகர் அர்ணவ் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தையை காமினு திவ்யாகிட்ட கேட்க மாட்டேன். அவங்களே காட்டினால் பார்ப்பேன். இல்லாவிட்டால் இல்லை என நடிகர் அர்ணவ் தெரிவித்துள்ளார்.

கேளடி கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தன்னுடன் காதலித்த சக நடிகரான அர்ணவ்வை காதலித்தார். இதையடுத்து இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு சில மாதங்களில் திவ்யா கர்ப்பமானார். இந்த செய்தியை சமூகவலைதளங்களில் வெளியிட்டு திவ்யா மகிழ்ந்தார். இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திவ்யாவுக்கும் அர்ணவ்வுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Serial Actor Arnav says that hereafter he doesnt ask divya to show their baby in video call

திடீரென அர்ணவ் தன்னை கடுமையாக தாக்குவதாகவும் கர்ப்பிணி என்றும் பாராமல் எட்டி உதைத்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது வயிற்றில் இருக்கும் கரு கலைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும் தன்னை வலுக்கட்டாயமாக முஸ்லீம் மதத்திற்கு மாற்றி அர்ணவ் திருமணம் செய்து கொண்டார் என்றும் பகீர் தகவலை தெரிவித்தார். இதையடுத்து இவருடைய புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த அர்ணவ்வை கைது செய்தனர். பின்னர் சில நாட்களில் அர்ணவ் ஜாமீனில் வந்தார். மேலும் செல்லமே தீரியலில் நடித்து வரும் பெண்ணுடன் அர்ணவ் நெருங்கி பழகுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த பெண்ணுடன் நேருக்கு நேர் திவ்யா சண்டை போட்டதால் அர்ணவ், திவ்யாவை கடுமையாக தாக்கியதாகவும் திவ்யா குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் திவ்யா ஸ்ரீ தனது டெலிவரி டேட்டிற்கு 10 நாட்களுக்கு முன்பு கூட தனக்கு உதவ கூட யாருமில்லை என கூறி ஒரு வீடியோ போட்டிருந்தார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் ரோஷத்தை தூக்கி போட்டுவிட்டு போய் மகளை பாருங்கள் அர்ணவ் என பலர் சமூகவலைதளத்தில் அறிவுறுத்தினர். இந்த நிலையில் தனக்கு குழந்தையை வீடியோ காலில் காண்பிக்குமாறு அர்ணவ் கேட்டிருந்தார். ஆனால் தான் நேரில் போய் திவ்யாவை பார்க்க மாட்டேன் என்றும் அவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல தனியார் ஊடகத்திற்கு அர்ணவ் அளித்த பேட்டியில் நிறைய விஷயங்களை சொல்லியுள்ளார். அதில் என்னுடைய குழந்தையை காண்பிக்குமாறு திவ்யாவை இனியும் நான் கேட்க மாட்டேன். அது போல் என் குடும்பத்தினரும் கேட்க மாட்டார்கள். அவங்களாக வீடியோ காலில் காட்டினால் பார்ப்பேன். இல்லாவிட்டால் வேண்டாம். இந்த உலகில் யாரும் அனாதையில்லை.

என் குழந்தையை திவ்யா பராமரிக்காவிட்டாலும் நான் பார்த்துக் கொள்வேன். எனக்கு சீரியல் வாய்ப்பு இல்லாவிட்டாலும் என் மகளை மூட்டைத் தூக்கியாவது வளர்ப்பேன் என தெரிவித்துள்ள அர்ணவ் அது என் ரத்தம் என கூறிய அர்ணவ், திவ்யாவை மன்னிக்க நான் ரெடி, ஆனால் மறுபடியும் இப்படி ஒரு தவறு நடக்காது என எப்படி நம்புவது என கேள்வி எழுப்பியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+