மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகர் வேணு அரவிந்த்..அதுவும் இந்த பிரபல சீரியலா..?வெளியான தகவல்கள்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்த் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு அவர் கோமாவில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உடல்நலம் பெற்று மீண்டும் நடிக்க வர இருக்கிறாராம்.
இந்த நிலையில் நடிகை ராதிகா உடன் மீண்டும் சீரியலில் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வேணு அரவிந்த் சில மாதங்களுக்கு முன்பு கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் ஒன்றை கொடுத்த வேணு தான் இப்போது உடல்நலம் தேறி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
வேணு, பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் அலைபாயுதே, வல்லவன் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சபாஷ் சரியான போட்டி என்ற திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறது.
இந்த நிலையில் அவர் குணமடைந்த சில நாட்களில் மீண்டும் அவருக்கு நிமோனியா வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் வேணு கோமாவில் இருக்கிறார் என்று பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர்.

அது குறித்து வாணி ராணி சீரியலில் வேணுடன் நடித்த நடிகை ராதிகா சரத்குமார் அப்போது ஐ சிவில் தான் அவர் இருக்கிறார். ஆனால் கோமாவில் இல்லை. அவர் நலமுடன் வீடு திரும்புவார். அவர் பற்றி எந்த வதந்திகளும் பரப்பாதீர்கள் என்று விளக்கமும் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு பிறகு உடல்நிலை சரியாகி வந்த வேணு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் நான் வில்லனாக நடித்து பலருடைய வாயில் விழுந்த பாவம் தான் எனக்கு இதெல்லாம் நடந்தது என்று கூட தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.
சீரியலில் வில்லனாக நடிக்கும் போது பலர் வெளியே போகும்போது என்னை முகத்துக்கு நேராக திட்டி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அது என்னுடைய நடிப்பிற்கு கிடைத்த வெகுமதி என்று நினைத்திருந்தேன்.. ஆனால் பலர் விட்ட சாபத்தால் எனக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று கூட பலமுறை வந்திருக்கிறேன் என்று பீல் பண்ணி பேசி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் சீரியலுக்கு நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுவும் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் எனும் சீரியலில் நடிகை ராதிகாவுக்கு ஜோடியாக இவர் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவரும் ராதிகாவும் நடித்த வாணி ராணி சீரியல் வேற லெவலில் ஹிட்டானது. அது போல இந்த சீரியலும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வேணு சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலுக்கு அவருடைய ரசிகர்கள் அதை வரவேற்று வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications