நேத்ரனுக்கு சொந்த வீடு இல்லை.. அரசு மருத்துவமனையில் தான் ட்ரீட்மென்ட்.. கடைசி ஆசை! வருண் உருக்கம்
சென்னை: சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் கடந்த செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார். நேத்திரன் 22 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் அவருக்கு சொந்த வீடு கிடையாது, அவருடைய கடைசி ஆசை இதுதான் என்று சில விஷயங்களை அவரோடு நடித்த நடிகர் வருண் கூறியிருக்கிறார்.
விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என பல சேனல்களில் 20 வருடங்களுக்கு மேலாக சீரியலில் நடித்த நேத்ரனின் இறப்பு செய்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி தான். 47 வயதில் இவர் புற்று நோய்க்காக கடந்த ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இவருடைய திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

நேத்ரன், சீரியல் நடிகை தீபா நேத்ரனை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் அபிநயா நேத்ரனுடன் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
நேத்ரனுக்கு வயிறு வலியில ஆரம்பிச்ச பிரச்சனை! கடைசியாக மெசேஜில் சொன்ன வார்த்தை! நடிகர் வருண் எமோஷனல்
நேத்ரன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ரஞ்சிதமே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி போன்ற சீரியல்களில் கடைசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பிறகு தீவிரமாக உடல் நிலை பிரச்சனைகள் இருந்ததால் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் நேத்ரன் இறப்புக்கு பிறகு அவரோடு பல சீரியல்களில் நடித்த நடிகர் சத்யா நேத்ரன் பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் நேத்ரனை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவர் ரஞ்சிதமே சீரியலில் இருந்து விலகிவிட்டார். அந்த சீரியலில் அவருக்கு பதிலாக என்னை நடிக்க சொல்லி இருந்தார்.
அதுபோல நேத்ரன் சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படவே மாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் அவருக்கு சொந்த வீடு கிடையாது. அவருக்கு புற்றுநோய் கன்ஃபார்ம் செய்ததும் அரசு மருத்துவமனையில் தான் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் முதலில் நாங்க எல்லாரும் பார்க்க வரோம் என்று சொன்னோம். ஆனால் அவர் யாரையும் நேரில் பார்க்க வர வேண்டாம் நான் முன்பு போல இப்ப இல்ல என்று சொல்லிவிட்டார். ஆனால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திடீரென்று குரூப்பில் மெசேஜ் போட்டு எல்லோரும் என்னுடைய பொண்ணு பிறந்தநாளுக்கு வாங்க என்று சொன்னார்.

எல்லாருக்கும் நானே பிரியாணி செய்து தரப்போறேன் என்றும் சொல்லி இருந்தார். அவருடைய பிரியாணி ரொம்பவும் அருமையாக இருக்கும். ஆனால் அவர் இப்படி சொல்வது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவர் தினமும் எல்லாருக்கும் மோட்டிவேஷனலான ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பி விடுவார்.
கடைசியில் அவருடைய செல்போனிலிருந்து எங்களுக்கு அவர் காலம் ஆகிவிட்டார் என்ற செய்தி வந்தது. ரொம்பவும் வருத்தமாக இருந்தது. நேத்ரனின் ஆசை அவருடைய பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரணும் அதை பார்க்க வேண்டும் என்று தான்.
இப்போது தான் அவருடைய இரண்டு மகள்களுக்கும் சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெற்றி அடைவதை பார்ப்பதற்கு இப்போது நேத்ரன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று நடிகர் வருண் கண்கலங்க பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications