நேத்ரனுக்கு வயிறு வலியில ஆரம்பிச்ச பிரச்சனை! கடைசியாக மெசேஜில் சொன்ன வார்த்தை! நடிகர் வருண் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் நேற்று முன்தினம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவரோடு பொன்னி சீரியலில் நடித்த நடிகர் வருண் உதய் நேத்ரனுக்கு கடைசி ஆறு மாத காலம் என்ன நடந்தது என்று கண்கலங்க பேசி இருக்கிறார்.

சின்னத்திரையில் நேத்ரன் 22 வருடங்களுக்கு மேலாக பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல நேத்ரனின் மனைவி தீபா நேத்ரனும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே சீரியலிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial

அதுபோல நேத்ரன் தீபா தம்பதிக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர் அதில் அபிநயா தன்னுடைய அப்பாவோடு சேர்ந்து விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இப்போது சினிமாவிற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் நேத்ரன் காலமானார். சில மாதங்களுக்கு முன்பு அபிநயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அறிவித்திருந்தார். அதற்கு பிறகு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

television baakiyalakshmi serial

ஆனால் நேத்ரன் இந்த நோயில் இருந்து மீண்டு வந்து மீண்டும் சீரியல் நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ரசிகர்கள் போலவே அவரோடு நடித்த நடிகர்களும் இதைத்தான் எதிர்பார்த்தனர் என்று அவரோடு நடித்த நடிகர்கள் பலர் பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் டிவியில் நேத்ரன் நடித்த பொன்னி சீரியலில் அவரோடு நடித்த நடிகர் வருண் உதய் நேத்ரன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், நேத்ரன் 22 வருடங்களுக்கு மேலாக சினிமா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

television baakiyalakshmi serial

எப்படியாவது இதில் நான் ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார். இப்போதுதான் அவர் அவருடைய மனைவி, அவருடைய மகள் என்று எல்லோருக்கும் அடுத்தடுத்து ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவருடைய வருமானமும் அதிகரித்தது. இனி என்னுடைய வாழ்க்கையில் கஷ்டம் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஆனால் அவருக்கு இந்த நிலைமை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் யாரையும் முகம் சுளித்து பேச மாட்டார். யாரிடமும் கோபம் பட மாட்டார். ஏதாவது ஒரு விஷயம் யாரிடமாவது கேட்க வேண்டும் என்றால் கூட இதை கேட்டால் அவர்கள் எதுவும் தப்பா நினைத்து விடுவார்களோ என்று ரொம்பவும் பயப்படுவார்.

எல்லோரிடமும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். எப்போதும் சிரித்த முகமாகத் தான் இருப்பார். அவருக்கு அடிக்கடி வயிறு வலி வந்து கொண்டே இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவருடைய வாய் பகுதியில் புண் வந்து அதில் லைட்டாக ஸ்மெல் வர ஆரம்பித்ததும் நான் அப்போதே அவரை ஹாஸ்பிடலில் செக் பண்ண சொன்னேன். அவர் சரியா சாப்பிடாததால் தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு அடிக்கடி லூஸ் மோஷன் ஆகி இருந்தது. அதற்கு பிறகு தான் அவருக்கு ஹாஸ்பிடலில் செக் பண்ணி பார்த்ததில் புற்றுநோய் பாசிட்டிவ் என்று வந்தது. அதற்குப் பிறகு அவர் உடல் எடை ரொம்பவும் குறைந்துவிட்டார். அவருடைய உடல்நிலை தெரிந்ததும் நாங்கள் வீட்டுக்கு வந்து பார்க்க வரோம் என்று சொன்னதற்கு கூட அவர் யாரும் வர வேண்டாம், நான் முன்பு இருந்ததில் பாதியாக மாறிவிட்டேன் அதனால் இப்போ வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நாங்கள் பொன்னி சீரியலில் நடிக்கும் எல்லோரும் whatsapp குரூப்பில் இருக்கிறோம். அதில் ஒரு மெசேஜ் போட்டு இருந்தார். எல்லோரும் இன்னைக்கு எங்க வீட்டுக்கு வரீங்களா என்று கேட்டிருந்தார். நான் இப்போதுதான் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்து இருக்கிறேன் எல்லாரும் சீக்கிரமா வாங்க என்று சொன்னார்.

எனக்கு அதைக் கேட்கும் போதே கஷ்டமாக இருந்தது. எதற்காக இவர் இப்படி சொல்கிறார் என்று எங்களுக்கு புரியவில்லை. கடந்த ஆறு மாத காலமாக அவர் ரொம்பவும் கஷ்டப்பட்டார் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வருவார் என்பதற்காகத் தான் அந்த கேரக்டரில் யாரையும் நடிக்க வைக்கவில்லை.

அவர் கூட என்னால் இனி நடிக்க முடியுமான்னு தெரியல வேற ஆட்களை நடிக்க வச்சிடுங்கன்னு சொன்னாரு ஆனாலும் நீங்க தான் அந்த கேரக்டரில் நடிக்கணும் என்று இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லோரும் சொல்லிவிட்டார்கள். அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறோம்.. ஆனால் இப்படி ஆகிடுச்சு என்று நடிகர் வருண் உதய் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+