மலைக்கு போயிட்டு வரேன்னு சொன்னேனே! இப்படி ஆகிடுச்சே.. நேத்ரன் இறப்பு பற்றி பதிவு வெளியிட்ட நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகர் யுவராஜ் நேத்ரன் இன்று (டிசம்பர் 3 ஆம் தேதி) காலமானார். இந்த சோக செய்தியை கேட்டு அவருடைய நண்பர்கள் சீரியல் நடிகர்கள் பலரும் கண்ணீர் பதிவு வெளியிட்டு வருகிறார்கள். நேத்ரனுடன் பல சீரியல்களின் நடித்த நடிகர் ராஜ்கமல் நேத்ரன் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய யுவராஜ் பல சீரியல்களிலும் நடித்திருந்தார். சின்னத்திரையை பொருத்தமட்டில் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த நடிகராக பயணித்து வந்தார். தன்னோடு சீரியலில் நடித்த தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

television baakiyalakshmi serial vijay tv

தீபாவிற்க்கு குழந்தை பிறந்த பிறகு சில வருடங்களாக சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் தான் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதுபோல நேத்திரனின் மூத்த மகன் அபிநயா தன்னுடைய தந்தையோடு சேர்ந்து சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தனர்.

television baakiyalakshmi serial vijay tv

அதுபோல அபிநயா இப்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்ட செய்தியை தெரிவித்து இருந்தார். அதற்கு பிறகு ஒரு பேட்டியில் தன்னுடைய தந்தை அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று தன்னம்பிக்கையோடு பேசி இருந்தார்.

television baakiyalakshmi serial vijay tv

ஆனால் இன்று நேத்ரன் காலமாகி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அவரோடு நடித்த நடிகர்கள் பலரும் அவர் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டு வருகிறார்கள். அதில் நடிகர் ராஜ்கமல் நேத்திரனோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, "நான் மலைக்கு போயிட்டு வரேன்னு சொன்னேன்ல.. என்னடா நீ.. நண்பா உன்ன ரொம்ப மிஸ் பண்றேன். உன்னுடைய சிரிப்பு, நீ என்னை கேர் எடுத்து கவனிக்கிற விதம், உன்னுடைய சமையல், டான்ஸ் எல்லாவற்றையும் மிஸ் பண்றேன்.. நீ ரொம்ப இன்னசென்ட்" என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதுபோல சீரியல் நடிகர் ராகவேந்திரன் "நடிகர் யுவராஜ் நேத்ரன் அண்ணா இன்று காலமானார் என்ற செய்தியை என்னால் ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவருடைய குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் பலன் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

television baakiyalakshmi serial vijay tv

எங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்து நாங்கள் அனைவரும் ஒன்றாக நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தேன். ஆனால் இப்படி நடந்து விட்டது.. நீங்கள் இனி நிம்மதியாக இருங்கள். நீங்கள் இப்போது கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பீர்கள், பாதுகாத்து வழி நடத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்.. லவ் யூ, மிஸ் யூ அண்ணா" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+