புது சீரியல் அப்டேட் கொடுத்த ஆலியா மானசா.. அப்போ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!
சென்னை: சீரியல் நடிகை ஆலியா மானசா தான் புதியதாக நடிக்க இருக்கும் சீரியல் குறித்த அப்டேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஆலியா மானசா சன்டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நடித்து வந்தார். இப்போது அந்த சீரியல் முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்த சீரியல் பற்றி போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்தும் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஆலியா மனசா விஜய் டிவியில் பெரிய அளவில் பிரபலமானது ராஜா ராணி என்ற சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலுக்கு முன்பு ஆலியா டான்ஸ் நிகழ்ச்சிகளில் விஜய் டிவியில கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல கோவில் திருவிழாக்கள், மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் ஆலியாவுக்கு ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

முதல் சீரியலில் பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதுவும் இளைஞர்கள் மத்தியில் ஆலியாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதிலும் அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவருக்காக ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி இருந்தனர். அந்த நேரத்தில் தான் தன்னோடு சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் செய்தி வந்த போது பலர் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது.
ராஜா ராணி சீரியலின் முதல் பாகம் முடிவடைந்ததும் முதல் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது உடல் எடை அதிகரித்து இருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து ராஜா ராணி சீரியலில் இரண்டாவது பாகத்தில் நடித்து வந்தார். அந்த சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்ததார். அதனால் சீரியலில் இருந்தும் விலகி விட்டார். அதற்குப் பிறகு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து சன் டிவியில் இனியா சீரியலில் நடிக்க தொடங்கி இருந்தார்.
சமீபத்தில் தான் இனியா சீரியல் முடிவடைந்தது. ஆலியாவின் கணவர் சஞ்சய் தொடர்ந்து சன் டிவியில் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆலியா சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் விளம்பரங்களிலும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தோடு அடிக்கடி சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஆலியாடம் நீங்க எப்போ சீரியலுக்கு மீண்டும் வருவீங்க? என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்விக்கு ஆலியா அடுத்த சீரியல் விரைவில் அறிவிக்கப்படும்... ஆனால் எந்த சேனல் என்று நீங்கள் கண்டுபிடிங்க என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதிகமானோர் இவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் தான் நடிப்பார் என்று கூறி வருகின்றனர்.
காரணம் ஆலியாவுக்கு விஜய் டிவி சீரியல்கள் தான் பெரிய பிரபலத்தை கொடுத்தது. சன் டிவியில் இனியா சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு பிறகு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அந்த சீரியலில் நேரம் மாற்றம் செய்யப்பட்டது முதலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் பிறகு நான் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications