பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் தயாரிப்பாளர்.. டிஜிபி அலுவலகத்தில் டிவி நடிகை தற்கொலை முயற்சி
சென்னை: தாலியை கட்டிவிட்டு பாலியல் தொழிலுக்கு தயாரிப்பாளர் தன்னை வற்புறுத்துவதாக கூறிய டிவி நடிகை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி. இவர் கடந்த மார்ச் 25 ஆம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கணவர் இல்லாமல் இரு குழந்தைகளுடன் நான் வசித்து வருகிறேன். நான் வேலையில்லாமல் இருந்த போது எனக்கு வேலூரை சேர்ந்த ராஜாதேசிங் என்கிற சுப்பிரமணி அறிமுகமானார்.
அவர் தான் தயாரிப்பாளர் என்றார். மேலும் சின்னத்திரையில் நடிகையாக எனக்கு வாய்ப்பு வந்தது. சில வேடங்களில் நடித்து வருகிறேன். இது போல் நடிகையானால் இயக்குநர்களுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். எனவே உன்னை தயாரிப்பாளர் ஆக்குகிறேன். நீ தயாரிப்பாளர் ஆனால் யாரிடமும் வேலை கேட்க வேண்டியதில்லை. நீ பலருக்கு வேலை கொடுப்பாய் என்றார்.

கோயிலில் தாலி கட்டிய தயாரிப்பாளர்
இதை நம்பினேன். அவர் என்னை கோயில்களுக்கு அழைத்து செல்வார். நானும் செல்வேன். அது போல் ஒரு முறை திருமணஞ்சேரிக்கு அழைத்து சென்ற போது கண்ணை மூடிக் கொண்டு சுவாமி கும்பிட்ட போது கையில் வைத்திருந்த தாலியை என் கழுத்தில் கட்டினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

மிரட்டி உறவு கொண்ட தயாரிப்பாளர்
எனக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் என்னை மிரட்டி மிரட்டியே என்னுடன் உறவு கொண்டார். மேலும் என்னை பாலியல் தொழில் செய்யுமாறு மிரட்டுகிறார். மேலும் எனது பெண் குழந்தையையும் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு மிரட்டுகிறார். இதனால் நான் ராஜாதேசிங்கை பிரிந்து குழந்தைகளுடன் ஆதரவில்லாமல் வாழ்ந்து வருகிறேன்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
நான் அவர் சொல்வது போல் நடந்து கொள்ளவில்லை என்றால் என்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். என்னை போல பல பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளார். அது போல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அவர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதானவர்.

தற்கொலைக்கு முயற்சி
எனவே என்னையும் பெண் குழந்தையும் காப்பாற்றுமாறு நடிகை பைரவி தனது புகாரில் கூறியுள்ளார். ஒரு மாதமாகியும் இந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று மாலை டிஜிபி அலுவலகத்தில் வந்தார். அப்போது கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர் தலையில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர். இதுகுறித்து மெரினா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications