எல்லாத்துக்கும் காரணம் பாண்டியராஜ் தான்.. கண்ணீர் விட்டு கதறினேன்.. மனம் திறந்த நடிகை தீபா
சென்னை: சீரியல் நடிகை தீபா தன்னுடைய பெயர் தீபா அக்கா என்று பலரால் அழைக்கப்படுவதற்கு காரணம் நடிகர் கார்த்தி தான் என்று கூறி இருக்கிறார்.
வாய்ப்புகள் இல்லாமல் அதிகமான கஷ்டத்தில் இருந்த நேரத்தில் தனக்கு உதவிய பாண்டியராஜ் குறித்து பல தகவல்களை நடிகை தீபா கூறியிருக்கிறார்.
கடவுள் கும்பிட்டால் மட்டும் போதாது வீட்டில் இருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல தகவல்களை தீபா பகிர்ந்து இருக்கிறார்.

ஜீ தமிழ் விஜய் டிவி என்ன பல முன்னனி சேனல்களில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தீபாவை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் தீபா அக்கா என்று தான் அழைத்து வருகிறார்கள். எப்போதும் கலகலப்பாக ஜாலியான ஒரு நபராக இருந்து வரும் தீபா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகங்கள் மற்றும் உணர்வு பூர்வமான தருணங்களை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தன்னுடைய மகனுக்கு சரியாக காது கேட்காததால் பேச்சு வராமல் இருந்திருக்கிறது. அப்போது தீபாவிடம் அவருடைய உறவினர்கள் சிலர் மலையில் மேல் இருக்கும் ஒரு சாமியாரை பார்த்தால் போதும் உங்களுக்கு மகனுக்கு பேச்சு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய மகனையும் முட்டு வலி உள்ள தன்னுடைய அப்பாவோடு அந்த மலைக்கு ஏறி சென்றார். ஆனால் அங்கே அந்த சாமியார் நான் என்ன டாக்டரா என்று கூறிவிட்டு என்னுடைய காலில் விழுந்து வணங்குங்கள் என்று கூறினாராம்.
இவர்களும் எப்படியாவது தன்னுடைய மகனுக்கு பேச்சு வந்து விட வேண்டும் என்று பக்தியில் வணங்கி இருக்கிறார். பிறகு அந்த சாமியார் இவருக்கு சிறிது குங்குமத்தை கொடுத்து அதை பாலில் கலந்து குடித்து வந்தால் குழந்தைக்கு பேச்சு வந்து விடும் என்று கூறி அனுப்பினாராம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்றும் முறைப்படி மருத்துவம் செய்த பிறகு தான் தன்னுடைய குழந்தை பேசியிருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய வாழ்க்கையில் அதிகமான மன அழுத்தத்திலும் கஷ்டத்திலும் சில காலங்கள் இருந்தாராம். அப்போது இவருடைய அம்மா நீ உன்னுடைய குடும்ப கோயிலுக்கு போயிட்டு வா என்று கூறினாராம். இவரும் அவருடைய குடும்ப கோவிலுக்கு போயிருக்கிறார். அங்கே பல பேர் இருக்கும் நிலையில் இவர் கோயிலில் சாமியை பார்த்ததும் தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். அப்போது இவருடைய கணவரை பார்த்ததும் இவருக்கு கொஞ்சம் வெக்கமாக வந்திருக்கிறது. ஐயோ இவர் முன்னாடி அழுதுட்டோமே என்று நினைத்தாராம்.

ஆனால் அதற்குப் பிறகு தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் அப்போது சாமியிடம் கொட்டி இருக்கிறார். ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் வேலையில்லாமல் படாத பாடுபடுகிறேன் என்று புலம்பி இருக்கிறார். ஆனால் அந்த கோவிலை விட்டு இவர் வீட்டுக்கு கூட வரவில்லையாம். அப்போதுதான் இவருக்கு பாண்டியராஜ் இடம் இருந்து போன் வந்திருக்கிறது. உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு தான் இவருக்கு நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் மூலமாகத்தான் நடிகர் கார்த்தி தன்னை முதன்முதலாக தீபாக்கா என்று அழைக்க ஆரம்பித்தாராம். அதற்கு பிறகு இப்போது அதிகமானோர் என்னை அப்படி அழைக்கிறார்கள். எனக்கு அது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் கடவுள் மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் கடவுளை மட்டும் கும்பிட்டால் போதாது. தன்னுடைய வீட்டில் இருக்கும் மாமனார், மாமியார், அப்பா, அம்மா போன்ற வயதானவர்களை பார்த்துக் கொண்டாலே நமக்கு எல்லாம் தானாக நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications