அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதா? நடிகை ரெஹானாவுக்கு ரூ.18 லட்சம் ஏன் செலவு செய்யணும்? பிரபலம் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை ரெஹானா பேகம், தொழிலதிபர் ராஜ் கண்ணன் இருவரும் மாறி மாறி புகார்களை தந்து, விசாரணை வரை சென்றுள்ளனர்.. இன்று இவர்கள் 2 பேரையுமே விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறையினர் அழைத்துள்ளனர்.. இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் நடக்குது.. மீடியாவில் உட்கார்ந்து பேசக்கூடிய அளவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? என்று நறுக்கென கேட்டுள்ளார்.

ஓட்டல் வைத்து நடத்தி வரும் 47 வயதான தொழிலதிபர் ராஜ் கண்ணன், சீரியல் நடிகை ரெஹானா. தனக்கு விவாகரத்து ஆனதாக சொன்னதால், ரெஹானாவை திருமணம் செய்தேன். பணஉதவி கேட்டதால் 18 லட்சம் ரூபாய் வரை பணம் தந்தேன். ஆனால், அவருக்கு விவாகரத்து ஆகவில்லை என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது, என்னை மோசடி செய்துவிட்டார் என்று புகாரில் கூறியிருக்கிறார்.

Television reehana begum raj kannan 18

உடனே ரெஹானாவும், பிசினஸ்க்கு தேவை என்று தன்னிடம் ரூ.18 லட்சம் வாங்கி, தன்னை மோசடி செய்துவிட்டதாக பதில் புகாரை கூறியிருக்கிறார். இதனால் 2 பேரையுமே இன்று போலீசார் விசாரிக்க உள்ளனர்.

பேச வேற பிரச்சனையே இல்லையே

இந்நிலையில், Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன.. விமான விபத்தின் அதிர்ச்சி முடியவில்லை, அதை பற்றி யாரும் இங்கு பெரிதாக பேசவில்லை, உலகம் முழுவதும் கவனிக்கக்கூடிய போர் நடந்து வருகிறது. அதை யாரும் பேசவில்லை.. இந்த சின்னத்திரை நடிகை விஷயத்தை இவ்வளவு பெரிதாக பேச வேண்டுமா?

ரெஹானா பேகம் 2 குழந்தைகளுக்கு தாய் என்பது தெரியும். அவர் விவாகரத்து ஆனவரா? இல்லையா? என்ற ஆவணத்தை ராஜ் கண்ணன் பார்த்திருக்க வேண்டும்தானே? செலவு செய்ததற்கான ஆன்லைன் ஆதாரம் வைத்திருக்கிறேன், ஜி-பே ஆதாரம் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறாரே, விவாகரத்துக்கான ஆதாரத்தை கேட்காமல், பணத்தை நடிகை அபகரித்து கொண்டதாக புகார் சொல்லலாமா?

2 பேர் சொல்வதையும் நம்ப முடியல

நடிகை வாய்மொழியில் சொன்னதாலேயே அதை நம்பிவிடுவதா? பணத்தை நடிகைக்கு செலவு செய்ததாக சொன்னால், அந்த பணத்தை சும்மா செலவழிக்க முடியாதே? மனைவியாக ஏற்றுக் கொண்டதால்தானே தொழிலதிபர் செலவு செய்திருப்பார்? இப்போது வந்து ஏமாற்றி விட்டார் என்று தொழிலதிபர் சொல்வது நம்புவது போல இல்லை.

அதேபோல தனக்கு கட்டாய தாலி கட்டிவிட்டதாக சொல்கிறார் ரெஹானா பேகம்.. இதுவும் நம்பும்படியாக இல்லை.. ரெஹானாவின் ஒழுக்கமற்ற வாழ்க்கைகூட, முதல் திருமணம் தோல்வியடைய காரணமாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் 2 பேரிடமும் உண்மைத்தன்மை இல்லை.. முறைகேடாக இருவருமே வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து ஆளாளுக்கு குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு பெண்ணுக்கு 18 லட்சத்தை கொட்டி செலவு செய்த நபர், பசியில் உள்ள 10 பேருக்காவது சாப்பாடு வாங்கி தந்திருப்பாரா?

புனிதமான வார்த்தை

படுக்கைக்கு அந்த பெண்ணை பயன்படுத்தி கொண்டதற்கு, அவருக்கு தந்துள்ள சன்மானம்தான் அந்த 18 லட்சம். இங்கே இருவரிடமும் அன்பு, காதல் என எதுவுமே இல்லை.. இதற்கு எதற்காக திருமணம் என்ற புனிதமான வார்த்தையை ராஜ் கண்ணன் பயன்படுத்த வேண்டும்? ஊரறிய உலகறிய கோயிலிலோ, மண்டபத்திலோ இந்த திருமணத்தை செய்யவில்லை.. வீட்டில் வைத்து தாலி கட்டியதாக சொல்கிறார்.. இதுவும் ஒரு வகையான லிவிங் டூ கெதர் உறவுதான்..

உண்மையிலேயே இது திருமணம் என்றால், ஒரு கணவனை அந்த பெண் இப்படி சொல்வாரா? அல்லது ரெஹானாவை மனைவியாக பாவித்திருந்தால், அந்த பெண் பேசியதை ராஜ் கண்ணன் ரிக்கார்டு செய்வாரா? அந்தரங்கமாக பேசியதை ரிக்கார்டு செய்யலாமா? கணவன் - மனைவிக்குள் பேசிக் கொள்வதை ஒருவருக்கொருவர் ரிக்கார்டு செய்து கொள்ளவே மாட்டார்கள்.

மறுமணம் குற்றமல்ல

மறுமணம் என்பது குற்றமல்ல.. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் செய்து கொள்ளலாம்.. ஆனால், அது பகிரங்கமான திருமணமாக இருக்க வேண்டும்.. வெளிப்படையான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.. அதுதான் பாதுகாப்பும் கூட..

இருவருமே ஒழுங்கற்ற வாழ்க்கையை, முறையற்ற வாழ்க்கையை, அசிங்கமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, தற்போது சட்டப்படி நீதிமன்றத்தில் தீர்வு காணக்கூடிய விஷயமாக இது தெரியவில்லை.. இதுபோன்ற நடிகைகளால் சின்னத்திரையும் சீர்கெட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது..

ஆதாரம் எங்கே

அதேபோல, ராஜ் கண்ணனுக்கு 18 லட்சம் செலவு செய்ததாக நடிகை ரெஹானா சொல்வதும் நம்புவது போல இல்லை.. நகையை அடகு வைத்ததாக சொல்கிறார்.. நகையை அடமானம் வைத்திருக்கலாம், ஆனால், அதை அடமானம் வைத்து ராஜ் கண்ணனுக்குதான் தந்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா தெரியவில்லை.

எந்த பிரபலம் வீட்டில் பிரச்சனை என்றாலும் ரிஹானா பேகம், குரல் கொடுத்துவிடுவார்.. ஆனால், இப்போது அவரது போலித்தனத்தை, ராஜ்கண்ணன் அம்பலமாகிவிட்டார்.. ராஜ் கண்ணன் யார் என்பதை ரெஹானா அம்பலப்படுத்திவிட்டார்.. இப்போது அந்த 2 குழந்தைகளின் நிலைமை, எதிர்காலம் என்னாவது? இருவருமே இந்த விஷயத்தில் சரியில்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+