சித்ரா போல போய்டனும்.. மைனர் பெண்ணை வைத்து சீமானுக்கு குறி! ராஜ்கண்ணன் காரில் அதை பார்த்தேன்: ரிஹானா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ் கண்ணன் வீட்டில் எப்போதுமே பெண்கள் ஸ்டாக் இருப்பார்கள்.. கொகைன் போதைப்பொருள் உள்ளது.. அவரது காரில் கத்தி அரிவாள் உள்ளது என்றெல்லாம் சின்னத்திரை நடிகை ரிஹானா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.. அத்துடன், சீமான் சாருக்கு ஏதாவது ஒரு மைனர் பெண் தொடர்பு இருந்தால், அந்த மைனர் பெண்ணை வைத்து சீமான் சாரை தொடர்பு கொண்டு, சிசிடிவி கேமரா காட்சிகளைக் காட்டி, ராஜ்கண்ணன் பேரம் பேசியதாகவும் புகார் கூறியிருப்பது பரபரப்பை உண்டு பண்ணி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம். இவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, 18 லட்சம் பணத்தையும ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Television reehana rihana begum

ரிஹானா பேகம் குற்றச்சாட்டு

இதைத்தொடர்ந்து ரிஹானா பேகமும், "தொழில் தொடங்குவதற்காக என்னிடம் வாங்கிய 20 லட்சம் ரூபாயை ராஜ்கண்ணன் திருப்பி தரவில்லை.. எனக்கு தெரியாமலேயே என்னை திருமணம் செய்து கொண்டார் என்று பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் ரிஹானா பேகம், இருவருமே மாறி மாறி புகார்களை கூறியிருந்த நிலையில், இதுதொடர்பான விசாரணையையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் ரிஹானா, தற்போது, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ராஜ்கண்ணன் மீது மீண்டும் அளித்துள்ளார்.

ஆதார் கார்டு , பான் கார்டு

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ராஜ்கண்ணன் என்பவர் பெயர் அழகர்சாமி.. ஆதார் கார்டு, பான் கார்டு முதல் அனைத்திலுமே தன்னுடைய அடையாளங்களை மாற்றிக் கொண்டவர்.. ஆனால், நான் மோசடி செய்ததாக சொல்கிறார்.. ஆசை காட்டி நான் அவரிடம் பணம் பறித்தேன் என்கிறார்.. எல்லாமே பொய். அவர்தான் எனக்கு காசு தரவேண்டும்.

முதல்ல அவர், தொழிலபதிரே கிடையாது. சாதாரண ஏஜெண்ட்டுதான்.. அதுவும் பெண்களை வைத்து பிசினஸ் செய்து வருகிறார்.. அடிக்கடி என்னை ரெஸ்ரோ பாருக்கு அழைத்து செல்வார்.

அதனால்தான் என்னை சிலர் முன்கூட்டியே அலர்ட் செய்தார்கள்.. "எந்த பெண் சிக்கினாலும், அவர்களை வைத்து பிசினஸ் செய்துவிடுவார் அல்லது அவர்களிடமிருந்து பணத்தை பறித்துவிடுவார்.. நீ ஜாக்கிரதையா இரும்மா" என்றார்கள்.. ஆனால், பணத்தை நான் அவரிடம் தரும்வரை, அவரது சுயரூபம் எனக்கு தெரியாது.

காரில் அரிவாள் கத்தி

அவரது காரில் எப்போதுமே பின்சீட்டில் அரிவாள் கத்தி இருக்கும்.. இது நானே என் கண்ணால் பார்த்தது.. எப்படியோ நான் அவரிடம் மாட்டிக்கிட்டேன்.. இப்போது என்னுடைய அவரிடம் உள்ளது.. அதனால் தான் நான் முன்கூட்டியே புகார் கொடுக்கவில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு, மறுநாளே புகார் தரலாம் என்று நினைத்தேன். ஆனால், அதுக்குள்ளேயே இப்படியொரு நாடகம் நடத்திவிட்டார்.

எனக்கு தாலி கட்டியது, என்னை தவறாக பயன்படுத்தி கொண்டது, பணத்தை தந்திரமாக பேசி வாங்கி கொண்டது, இதெல்லாம் இருந்ததால்தான் புகார் தர தயங்கினேன்.. எனக்கு தாலி கட்டிய மறுநாளே, என்னுடைய வீட்டுக்கு வந்து தங்கிவிட்டேன். அந்த ஆத்திரத்தில் தான் இப்படி செய்துவிட்டார். எனக்கு தெரியாமலே தாலி கட்டிவிட்டு, குடும்பம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.

மோசடிகள் - ஆதாரங்கள்

கல்யாண ஆசை காட்டி மோசடியை நான் செய்யவில்லை.. மோசடி செய்தது அவர்தான்.. அதற்கான ஆதாரத்தை வைத்திருக்கிறேன்..

ஆனால், அவரது நண்பர், ராஜ்கண்ணன் ரவுடி இல்லை, மிகவும் நல்லவன்.. தாலி கட்டின பிறகு ஒன்றாக வாழ வேண்டியதானே? என்கிறார்.. ராஜ்கண்ணன் ஏற்கனவே ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்.. அப்படியிருக்கும்போது அவருடன் எப்படி வாழ்வது?

சீமான் விஜயலட்சுமி விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது, அதில் என்ன செய்யலாம் என்று காரில் உட்கார்ந்து கொண்டே ஸ்கெட்ச் போட்டார்.. ஸ்பீக்கரில் யார்கிட்டயோ போனில் பேசி ஸ்கெட்ச் போட்டுட்டு இருந்தார்.. மொத்தம் 3 பேர் அந்த போனில் பேசிகொண்டிருந்தார்கள்..

சீமான் விவகாரம்

ஒருத்தர் ஃபிரேமில் இருந்தால், அவரை டீஃபிரேம் செய்ய எதையும் செய்யலாம் என்பதே ராஜ்கண்ணனின் எண்ணம்.. கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதாவது, சீமான் சாருக்கு ஏதாவது ஒரு மைனர் பெண் தொடர்பு இருந்தால், அந்த மைனர் பெண்ணை வைத்து சீமான் சாரை தொடர்பு கொண்டு, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பேரம் பேசுவதுதான் அந்த பிளான்..

இதேபோல செய்தால், உனக்கும் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் என்னிடமும் சொன்னார்.. அந்த 80 லட்சத்தில் எனக்கு ரூ.60 லட்சத்திற்கு பிளாட் ஒன்றை வாங்கி தருவதாகவும, அதில் ரூ.10 லட்சத்திற்கு இன்டீரியர் டெக்கரேஷன் செய்து தருவதாகவும் கூறினார்.. இதையெல்லாம் நானும் உண்மையென நம்பியிருக்கிறேன்.

வீட்டில் இல்லீகல்

ராஜ்கண்ணன் வீட்டில் கொகைன், உள்ளிட்ட போதைப்பொருட்கள் உள்ளன.. எப்போதுமே அந்த வீட்டில் பெண்கள் ஸ்டாக் இருப்பார்கள்.. யாரை கேட்டாலும், அக்கா, தங்கை என்று சொல்வார்.. அந்தவகையில், இலங்கையிலிருந்து ஒரு பெண் ஐந்தாறு வருடங்களாகவே வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார்.. கையில் பான் கார்டு, ஆதார் கார்டு எதுவுமே இல்லாமல் செய்வது பூரா இல்லீகல்தான்.

அதேபோல, சிங்கிள் பேரண்ட்டாக இருக்கும் பெண்கள், திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பெண்களையே குறிவைத்து, சம்பாதிக்கிறார்.. அதிலும் அவர்கள் அழகாக இருந்தால் அவர்களை வைத்து பிசினஸ் செய்கிறார்கள்.. இதற்காக பல பெண்கள், இளைஞர்களை பயன்படுத்துகிறார்கள். இதில் பலரும் சம்பந்தப்பட்டு, வழக்குகளும் ஏற்கனவே பதிவாகியிருக்கின்றன..

ராஜ் கண்ணனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் உண்டு.. அவர்களில் பலர் எனக்கு போன் செய்து பேசுகிறார்கள்..உங்களை போல நானும் பாதிக்கப்பட்டேன் என்கிறார்கள்.. ஆனால், புகார் கொடுக்க யாருமே முன்வராமல் உள்ளனர்.. ஏனென்றால் அத்தனை பேரையும் மிரட்டி வைத்திருக்கிறார் ராஜ்கண்ணன் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு ரிஹானா பேட்டி தந்திருந்தபோது, மனசு வெறுத்துப்போய்விட்டது, இதற்கு மேல் இருந்து என்ன செய்வது? ராஜ் கண்ணனுடன் இருந்தால் அவமானப்பட்டு சாகவேண்டும் என அதற்கு மானத்தோடு பிஜே சித்ரா போல நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து தற்கொலை முடிவு எடுத்தேன் என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+