யானை தாக்கிய நடிகை சந்தியாவை கணவர் நடுரோட்டில் கேட்ட வார்த்தை..உயிரை காப்பாற்றியதற்காக இப்படியா?
சென்னை: சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி சந்திரலேகா அத்தி பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர்.
அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்தது எதற்காக என்பது பற்றி பேசி இருக்கிறார்.

அத்தோடு உயிருக்கு போராடியவருக்கு உதவி செய்ததற்காக தன்மீது சுமத்தப்பட்ட பழி குறித்தும் அவர் அதில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரபலங்கள் பலருடைய வாழ்க்கையிலும் வெளியே தெரியாத பல சோகங்களும், துயரங்களும் ஒளிந்து இருக்கும். அது வெளியே அவர்கள் சொல்லும்போது இவர்களுடைய வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகளா? இதையெல்லாம் மறைத்து தான் இப்படி சிரித்துக் கொண்டிருந்தார்களா? என்று கூட என்ன தோன்றும் அந்த மாதிரி தான் வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்த நடிகை சந்தியா ஜகர்லமுடி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அத்தோடு நடிகை சந்தியாவின் வாழ்க்கையில் சாவின் விளிம்பு வரைக்கும் சென்று விட்டு பல போராட்டங்களுக்குப் பிறகுதான் மீண்டு இப்போது உயிர்பிழத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் சினிமா சூட்டிங் போது சந்தியாவை கோவிலில் இருந்த யானை திடீரென்று தாக்கியதால் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடி ஆபத்தான கட்டத்தில் இருந்து சந்தியா பல மாதங்களுக்கு பிறகு தான் பழைய நிலைக்கு மாறி இருக்கிறார்.

ஆனாலும் இப்போது வரைக்கும் தன்னுடைய வாழ்க்கையில் அந்த வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் அவருடைய குடும்ப வாழ்க்கையை குறித்தும் அதில் பகிர்ந்து இருக்கிறார். அப்போது நான் பல நாய்களை வைத்து பராமரித்து வருகிறேன். இதுதான் எனக்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சந்தியாவின் திருமண வாழ்க்கை இரண்டு வருடத்தில் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தனியாகத்தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார். நான் இன்னொரு திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கேற்ற ஒரு நபரை நான் பார்க்கவில்லை. நான் இன்னொரு முறை திருமணம் செய்து கொண்டால் கூட கண்டிப்பா இனி நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்.
ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. அதனால் நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அது மட்டும் இல்லாமல் என்னிடம் பலரும் ஏன் மனிதர்களுக்கு பணம் கொடுத்து உதவலாமே அதை விட்டுட்டு நாய்களுக்கு செலவு செய்து பராமரித்து கொண்டிருக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். நான் ஒரு நபருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அடுத்த மாதம் மீண்டும் 50 ஆயிரம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் இந்த நாய்கள் என்னிடம் எதையுமே கேட்பதில்லை, எதிர்பார்க்கவும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய திருமண வாழ்க்கை பிரிவதற்கு காரணம், ஒரு முறை திருமணமான புதிதில் நானும் என்னுடைய முன்னாள் கணவரும் காரில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டது.
நான் உடனே ஓடிப் போய் அடிபட்டிருந்த குழந்தைக்கும் அவருடைய தந்தைக்கும் உதவி செய்தேன். பிறகு திரும்பி பார்த்தால் நான் வந்த கார் அங்கு இல்லை. ரொம்ப தூரம் தள்ளி இருந்தது. பிறகு நான் நடந்து சென்று ஏன் இவ்வளவு தூரம் என்னை விட்டுட்டு வந்தீங்க என்று கேட்க, அதற்கு அவர்," நீ என்ன அவன் பொண்டாட்டியா? அங்கு எத்தனை பேர் இருந்தபோது நீ ஏன் ஓடி சென்று உதவினாய்..? என்று கேட்டார். இப்படித்தான் சின்ன சின்ன பிரச்சனைகளால் எங்களுக்குள் செட் ஆகவில்லை. அதனால் பிரிந்து விட்டோம் என்றும் அந்த பேட்டியில் நடிகை சந்தியா ஜகார்லமுடி கூறி இருக்கிறார்.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications